முறையீட்டின் குறிப்பித்தக்க அம்சங்கள்[உரிய விமர்சனங்களுடன்]:
*மத மற்றும் நிர்வாக உரிமையை மதிக்கும் வகையில் ஆய்வு நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
???இவர்கள் வருமானத்திற்காக மணியடித்து மந்திரம்(இது வெறும் தந்திரம்) சொல்பவர்கள். மத உரிமை பற்றிப் பேச இவர்களுக்கு யோக்கியதை ஏது?[கோயில் எழுப்பியதில் ஒரு துரும்பைக்கூட இந்தத் தீட்சிதன்கள் அசைத்தது இல்லை. முன்னாள் பெண் முதலமைச்சரின் ஆதரவோடு பெற்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்].
*சிதம்பரம் நடராசர் கோயிலில் வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத தனித்துவமான வேத சம்பிரதாய முறை பின்பற்றப்படுகிறது.
???தாஙகள் நிறுவிய சிலையில்[அது கல்லாகவோ, களிமண்ணாகவோ, பத்தரை மாற்றுத் தங்கமாகவோ, வேறு எந்தவொரு உலோகத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்] கடவுள் இடம்கொண்டிருப்பதாக மக்கள் நம்பி வழிபடுகிறார்கள்.
சிதைந்து சீரழிந்த ஒரு கோயிலில் இருக்கும் கடவுளுக்கும், பொன் வேய்ந்த கூரையின் கீழிருக்கும் தில்லை நடராசனுக்கும் எந்தவொரு வேற்றுமையும் இல்லை. இதை மக்கள் புரிந்துகொள்ளாத காரணத்தால் இந்தத் தீட்சிதன்கள் இவ்வாறெல்லாம் பொய் சொல்லித் திரிகிறார்களா?
*திருமஞ்சன விழா ஏற்பாடுகளைக் கவனிக்கிறோம். அறநிலையத்துறையின் அறிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் தேவை. *செல்லுபடி ஆகும் வகையில் அமைக்கப்பட்ட குழுவுக்குத்தான் ஒத்துழைப்பு அளிப்போம்.
???எவ்வளவு திமிர் இருந்தால், தமிழின மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை இப்படியெல்லாம் அவமானப்படுத்துவார்கள் இந்தத் தீட்சிதன்கள்?
இதற்கான தைரியத்தை இவர்கள் பெற்றது எப்படி? பின்னணியில் அதிகார வர்க்கமும், இந்து வெறியர்களும் இருப்பதால்தானே?
இந்தப் பின்னணியை அத்துபடியாய்ப் புரிந்துகொண்டுள்ள தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகுதல்[மேல் முறையீடு] போன்ற நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்படுதல் மிக அவசியம்.
இவர்களின் கொட்டங்களை அரசு அடக்கும் காலம் வரும் என்று காத்திராமல் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடுவது தமிழ் மக்களின் கடமையும்கூட!
======================================================================================