எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

நித்தியானந்தா மரணம்!? இழப்பு யாருக்கு?


குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்தப் போலிச் சாமியார் உயிரோடு இருந்தால், ஆன்மிகத்தின் பெயரால் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருப்பான்; இறந்திருந்தால் இழப்பு ஏதுமில்லை; வருந்துவதும் தேவையற்றது.

நாம் வருந்துவது.....

'பாஜக’ நிர்வாகம் நினைத்திருந்தால் சில மணி நேரங்களில் இவனைக் கைது செய்து, இங்கே கொண்டுவந்து கம்பி எண்ண வைப்பது மிக எளிதாக இருந்தபோதும், ஓர் இந்துவாக விதம் விதமாய் வேடங்கள் தரித்து, தன்னால் இயன்றவரை மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தடுத்தானே, அது முட்டாள்களை நம்பி அரசியல் நடத்தும் ‘பாஜக’வினருக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது என்பதால்தான்.

உண்மையில் இவன் இறந்திருந்தால் அது ‘பாஜக’வுக்கு மட்டுமே பேரிழப்பாக அமையும்!