ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஏழுமலையான் கோயிலில் இனி ‘திருப்பதி அல்வா’?!?!

‘புகழ்பெற்ற திருப்பதி கோவில் லட்டுவில் விலங்குக் கொழுப்புகள் கலக்கப்பட்ட விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நாளை முதல் 3 நாட்கள் பரிகார பூஜை நடக்கவுள்ளது’[தினமலர்].


பாவங்களைச் செய்தமைக்காகச் செய்யப்படும் பரிகாரங்களைப் பிராயச்சித்தம்
 என்றும் அழைக்கின்றனர். இவற்றில் கொலை முதலிய கொடிய பாவங்களிலிருந்து விடுபட வழிவகைகள் கூறப்பட்டுள்ளன[.https://ta.wikipedia.org/wiki]


கடவுள் என்று ஒரு நபரைக் கற்பனை செய்து, அவனை வழிபட்டால் துன்பங்கள் தீரும் என்னும் நம்பிக்கையை மக்கள் மனங்களில் திணித்தவன்கள் பக்தியின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஆன்மிகப் புரட்டன்கள்.


நற்செயல்களால் புண்ணியமும், கெட்டக் காரியங்களால் பாவமும் சேர்கிறது[செய்பவர்களை] என்று புளுகி வைத்தவன்கள் இவன்களே[அமைதியான வாழ்வுக்கு நல்லன செய்தலும் தீயன தவிர்த்தலும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை].


பாவம் செய்தவரைக் கடவுள் தண்டிப்பார்; புண்ணியவான்களை ஆசீர்வதிப்பார் என்று புருடா[சொர்க்கச் சுகம், நரக வதை உட்பட] விட்டவன்களும் இந்தப் பாவிகளே.


அடுத்து இந்த அயோக்கியர்கள் அடித்துவிட்ட பொய் கற்பனைக்கு எட்டாதது.


செய்த பாவங்கள் நீங்க இவன்கள் பரிகார பூஜை செய்கிறான்களாம்.


என்ன அது பரிகார பூஜை?


தீயை மூட்டி, அதில் குடம் குடமாய் நெய்யைக் கொட்டி ஆவியாக்கி, புரியாத ஒரு குப்பை மொழியில் மந்திரம் சொல்வதால், செய்த பாவங்கள் புண்ணியங்களாக மாறிவிடுமா?அப்புறம் எதற்குப் பாவம் செய்யாதே என்று புத்திமதி சொல்லுறானுங்க?].


திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பாவ காரியம். அதற்குப் பரிகாரம் செய்யவிருக்கிறார்கள் என்பதுதான் ஊடகங்களில் இப்போதையப் பரபரப்புச் செய்தி.

மாட்டுக் கொழுப்பைக் கலப்பது தப்பு என்றாலும்[பன்றிக் கொழுப்பு, குதிரைக் கொழுப்பு போன்றவற்றைச் சேர்க்கலாமா?] அது கலக்கப்பட்ட லட்டைத்தான் பக்தர்கள் இப்போதும் விரும்பி வாங்குகிறார்கள் என்பது தினமலர்ச் செய்தி.

மாட்டின் கொழுப்பைக் கலப்பது தவறு என்றால், அதன்  பாலைக்கொண்டு சாமியைக் குளிப்பாட்டுவது தவறில்லையா?[எது தப்பு, எது சரி என்று நிர்ணயம் செய்ய இவன்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

கோயிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு[மனம் சம்பந்தப்பட்டது]ப் போகிறவனுக்கு வாய்க்குச் சுவையான லட்டு[மட்டும்] கொடுப்பது ஏன்”


லட்டுடன் அல்லது, அதற்குப் பதிலாக அல்வா, ஜிலேபி, மைசூர்பாகு, குலோப்ஜாமூன் போன்ற சுத்த நெய்யினால் செய்த இனிப்புப் பண்டங்களைப் பிரசாதம் என்னும் பெயரில் வழங்கி வருமானத்தைப் பெருக்கலாம்; பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.


செய்யுமா ஏழுமலையான் கோயில் நிர்வாகம்?!