‘வயாக்ரா போன்ற மருந்துகளை உட்கொள்ளும் ஆண்கள் ‘மறதி’ நோய்க்கு உள்ளாவது 18% அளவுக்குக் குறைகிறது என்கிறது ’நியூராலஜி’ இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு.
2000 - 2017க்கு இடையிலான காலக்கட்டத்தில், உடலுறவு விசயத்தில் பலவீனம் கண்டறியப்பட்ட 40 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதும் ஆன 269,725 ஆண்களின் மருத்துவப் பதிவுகளை லண்டன் பல்கலைக் கல்லூரி(UCL) நிபுணர்கள் ஆய்வு செய்தபோது வயாக்கரா போன்ற மருந்துகளின் பயன்பாடு கண்டறியப்பட்டதாம்.
நோய்வாய்ப்படும்போது[அல்லது, உடல் நலத்துக்காக] எடுத்துக்கொள்ளும் மருந்துகள்.
அல்சைமர்ஸ் ஆராய்ச்சியாளர்கள்[UK] கூறியது, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும், டிமென்ஷியாவை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கவும் அல்லது சிகிச்சையளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சில்டெனாபில்(வயக்ரா என விற்கப்படுகிறது), தடாலாஃபில் (சியாலிஸ்), வர்தனாஃபில் & அவானாஃபில் உள்ளிட்ட PDE5I மருந்து வகைகளில் பாதிக்கும் கூடுதலாக(55%) பரிந்துரைக்கப்படுகின்றன.
உயர் இரத்த அழுத்தம் & ஆஞ்சினா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட வயாகரா இவற்றில் முதன்மையானது ஆகும்.
* * * * *
விரிவானதும் மிகத் துல்லியமானதுமான தகவல்களுக்குக் கீழ்க்காணும் ஆங்கிலக் கட்டுரையை வாசிக்கலாம்.