திங்கள், 12 ஜூன், 2017

உயிர் ஒரு புதிரா? “அல்ல...அல்ல” என்கிறது இன்றைய அறிவியல்!

உயிர் குறித்த விரிவான ஆய்வல்ல இப்பதிவு. அது குறித்த ஒரு சுருக்கமான விளக்கம் மட்டுமே!

#நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி, உயிர்வாயு[ஆக்சிஜன்] கலந்து, வேதியியல் மாற்றங்களைப் பெறுவதன் மூலம் சக்தியாக மாறுகிறது. அச்சக்தி செல்களிலும் ஊடுருவுகிறது. செல்கள் உரிய சக்தியைப் பெற்ற நிலையில் உடம்பு இயங்குகிறது.
இவ்வகையில், உடம்பின் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைவது ‘சக்தியே’ என்பது அறியப்படுகிறது. இந்தச் சக்தியே ‘உயிர்’[*] என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தச் சக்தியை நம் உடம்பானது முற்றிலுமாக இழக்கும்போது அதன் இயக்கம் நின்றுபோகிறது; பின்னர் அழிந்துபோகிறது.

ஆக, உடம்புக்குள் பரவிக்கிடப்பது ‘சக்தி’ மட்டுமே; உயிர் என்று கூடுதலாக ஒன்று இல்லை[இந்தச் சக்தியை, ’உயிர்ச் சக்தி’ என்றும் அழைத்துக்கொள்ளலாம்]. 

இது, இன்றைய அறிவியல் வழங்குகிற உடம்பின் இயக்கம் பற்றிய செய்தியாகும்.

எனவே, இனியேனும்.....

நம் உடம்புக்குள் ஏதோ “இருக்கு...இருக்கு...இருக்கு” என்று கிறுக்குத்தனமாய் உளறிக்கொண்டிருக்காமல், இருக்கும்வரை பிற மனிதர்கள் மீதும் ஏனைய உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்திட முயற்சி செய்வோம்.

உயிர் குறித்த கூடுதல் தகவல்கள்:

வடமொழியாளர், இந்த உயிர்ச்சக்தியை ‘பிராணா’ என்றார்கள்.

எகிப்தியர் - ‘கா’[Ka]

சீனர்   -  ஷீ[Shi or Qi]

ரோமர் & கிரேக்கர் - ‘ஈதர்’[Ether]
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கண்ட தகவல்கள் பற்றிய ‘ஆதாரம்’, ‘போகூழ்[?]’ காரணமாகத் தொலைந்துவிட்டது என்பதை மிகு வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்!


10 கருத்துகள்:

  1. இந்த சக்தியைத்தான் மனுஷன் சிவ-சக்தி அப்படினு சொல்றானோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்!

      பதிவை இணைத்துக் கண்மூடித் திறப்பதற்குள் தங்களின் கருத்துரை!!!

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. மிக அருமையான தகவல். இந்தக் காலங்களில் உங்கள் அறிவுப்பசி அடங்கிடாது போல இருக்கே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவுப்பசி இல்லேன்னா உடம்பு இயங்காது. அறிவுப்பசி இல்லேன்னா மூளைக்கு ஆபத்து. அதனால, மனுசனாப் பிறந்த அத்தனை பேருக்கும் இது தேவை[கொஞ்சம் கூடக்குறைய]யல்லவோ![புகழப்பட்டதில் கொஞ்ச நேரம் மெய்மறந்து இருந்துட்டேன்!]

      நன்றி அதிரா.

      நீக்கு
  3. அருமையான தகவல் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. உடம்பில் சாமி வந்து ஆடுவதாக கூறுவது ,போலித் தனம் :)

    பதிலளிநீக்கு
  5. ஆகா,எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டீகள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கைந்து முறை திருத்தி எழுதினேன்.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு