வெள்ளி, 9 ஜூன், 2017

‘விந்து’ குறித்த என் விசித்திரக் கற்பனையும் ஒரு புராணக் கதையும்!

மாதம் ஒருமுறை, பெண்ணின் கருப்பையில் வந்து தங்கும் சினைமுட்டை ‘விந்தணு’வின் வரவிற்காகக் காத்திருப்பதும், அதனுடன் இரண்டறக் கலக்கும் விருப்புடன்[‘ஆண் - பெண்’ கலவிக்குப் பின்னர்] கோடிக்கணக்கான ஆணின் விந்தணுக்கள் கருப்பாதையில் பயணிப்பதும் பலரும் அறிந்த விந்தைதான்.

இது குறித்து எப்போதாவது சிந்திப்பதை[வேறு வேலை?] வழக்கமாகக் கொண்ட என் மனதில் சிலநாள் முன்பு, ஒரு விசித்திரமான கேள்வி உருக்கொண்டது.

காத்திருப்பது ஒரே ஒரு சினைமுட்டை. அதனுடன் கலந்துறவாட, கெத்தான ஒரே ஒரு விந்தணு ஆணிடமிருந்து வெளிப்பட்டால் போதுமே?[ஒருத்திக்கு ஒருவன்!] கோடி கோடி என்று மிகப் பெரும் கும்பல் எதற்கு? அவற்றிடையே நீச்சல் பந்தயம் எதற்கு? ஒன்றே ஒன்று வெற்றி வீரனாக  ஆரணங்கின் அரவணைப்பைப் பெற்றுவிட, மற்றதுகள் பொறாமையில் வெந்து வெடித்துப் புழுங்கி மரணத்தைத் தழுவுவது  ஏன்?

இது இயற்கையான நிகழ்வா, கடவுள் எனப்படுபவர் நிகழ்த்தும் திருவிளையாடலா?[‘...அலகிலா விளையாட்டுடையான்...’’ - கம்பன்] கடவுளின் செயல் எனின், ஏன் இந்தச் சிறுபிள்ளை விளையாட்டு?

கோடிகோடி விந்தணு வீரர்களின் ‘கலவிப் போட்டி’ தவிர்க்க இயலாதது என்றால், போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, காத்திருக்கும் சினைமுட்டைக் கன்னிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாமே? கோடிக்கணக்கான பிள்ளைகளை ஈன்றுபுறந்தருவதற்கான திடகாத்திர உடம்பைப் பெண்ணுக்கு வழங்கி அருள்புரியலாமே!?

இது சாத்தியமா?

‘சாத்தியமே என்கிறது புராணக் கதையொன்று.

முருகனுக்கும் அசுரர்களுக்கும் நிகழ்ந்த போரில், அழிக்க அழிக்கப் பெருகிவரும்[கணக்குவழக்கில்லாமல்] அரக்கர்களின் பெரும்படையைக் கண்டு, செய்வதறியாது முருகன் திகைக்க..... 

‘வல்லபை’ என்னும் அரக்கியின் பெருகும் உதிரத்திலிருந்து கோடானுகோடி அரக்கர்கள் உற்பத்தியாவதைக் கண்டறிகிறார் பிள்ளையார். அதைத் தடுத்திடும் முயற்சியில்[அவர் என்ன செய்தார் என்பதை அறிந்தார்வழிக் கேட்டறிக. அல்லது, சம்பந்தப்பட்ட புராணத்தை ஒருமுறை புரட்டுக. அந்த அசிங்கக் கதை இந்தப் பதிவைக் களங்கப்படுத்துதல் வேண்டாம்] வெற்றியும் பெற்றார். [பிள்ளையாரின் அசுர சாதனை ஒரு திருக்கோயிலில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது].
==================================================================================


























4 கருத்துகள்:

  1. உங்களுக்கு கடவுளின் அணுக்கிரகம் (கெரகம் என்று நினைக்க வேண்டாம்) நிறையவே இருக்கின்றது நண்பரே

    ஆகவேதான் இப்படியான சிந்தனைகள் தோன்றுகின்றது.

    பதிலளிநீக்கு
  2. பதிவை இணைத்தவுடன் இனிக்க இனிக்க ஒரு கருத்துரையா!

    நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு