பதில்[Venkat Rusty]:
என் உறவினர்கள் சிலர் இராணுவத்தில் இருந்தார்கள். அவர்கள் சொன்ன சில தகவல்கள்.
//அங்கு இந்தி கட்டாயம். பணியில் சேர்ந்த சில நாள்களில் அனைவரும் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்[ஒன்றும் பிரச்சனை இல்லை. பேசக் கத்துக்கிறாங்க. மற்றவர்களோடு பேசிப்பழகத் தேவையான அளவு கற்றுக்கொள்கிறார்கள்].
பிரச்சனை எங்கு என்றால், உயர் பதவிக்கான தேர்வுகளில்தான். தேர்வுகள் பெரும்பாலும் ஹிந்தியில்தான் நடக்கும். ஹிந்தி கத்துக்கிட்டவர்கள் ஹிந்தியைத் தாய் மொழியாகக் கற்றவர்களோடு போட்டியிட வேண்டும். சில தேர்வுகள் ஆங்கிலத்தில் உண்டு. நம்ம ஊரிலிருந்து 10ஆவது மட்டும் படித்துவிட்டுப் போகிறவர்களுக்கு ஆங்கிலம் எப்படி வரும்?[உரையாடல் மொழி இந்திக்குப் பதிலாக ஆங்கிலமாக இருந்தால், பிழைகள் இருந்தாலும் தேர்வை எதிர்கொள்ள முடியும். ‘இந்தி’யன்கள் முந்திக்கொண்டான்கள்] ஹிந்தி தெரிந்த அளவுக்குக்கூட அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
இப்படி ஒரு சிக்கல் பொதுத் தேர்வுகளிலேயே உண்டு என்பதைப் பெரியாரும் அண்ணாவும் அன்றே சுட்டிக்காட்டினார்கள். ஆனால், இராணுவத்துக்குள் நடக்கும் இந்த அநியாயத்தைத் தடுக்க அவர்களால் இயலவில்லை!
இது போன்ற எந்தப் பிரச்சனையைப் பற்றியும் கவலைப்படாமல் மும்மொழிக்கும் ஹிந்திக்கும் ஆதரவு கொடுக்கும் நம்ம ஊர் துரோகிகளைப் பற்றி என்ன சொல்வது!
!!!!!“இந்தி வெறியன்களின் இந்த அட்டூழியம் நீடிக்கும் நிலையில் நான் தொடர்ந்து இந்தியனாக இருப்பது[எப்போதும் இந்தியாவில் வாழும் தமிழனாக மட்டும்] சாத்தியமே இல்லை” என்று சொல்லத் தோன்றுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் வலுத்துவரும் நிலையில், சொன்னால் ‘தேசத் துரோகி’ என்பார்களே!