மேற்கண்ட செய்தியைப் படித்தவுடன், ஆயுதக் குழு[Armed group> militants]என்பதற்கும் ‘தீவிரவாதிகள்’[terrorist group] என்பதற்கும் உள்ள் பொருள் வேறுபாட்டை அறிந்திடக் ‘கூகுள் மொழியாக்கத்தைப் பயன்படுத்தியதில் கீழ்க்காணும் விளக்கம் கிடைத்தது.
The key difference between an armed group and a terrorist group lies in their primary tactics and target. Armed groups primarily engage in armed conflict to achieve political or ideological goals, while terrorist groups focus on using violence and fear to achieve their objectives, often targeting civilians>
ஆயுதமேந்திய குழுவிற்கும் பயங்கரவாதக் குழுவிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அவர்களின் முதன்மைத் தந்திரோபாயங்கள் மற்றும் இலக்குகளில் உள்ளது. 'ஆயுதக் குழுக்கள்' முதன்மையாக, அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைய ஆயுத மோதலில் ஈடுபடுகின்றன, அதே நேரத்தில் 'பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் நோக்கங்களை அடைய வன்முறை மற்றும் பயத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன; பெரும்பாலும் பொதுமக்களை குறிவைக்கின்றன.
‘ஆயுதக் குழுக்கள்’ என்பதற்கும் 'தீவிரவாதிகள்[குழுக்கள்]’ என்பதற்கும் வேறுபாடு இருப்பினும், ‘பிபிசி’ ஆயுதக் குழுக்கள் என்று குறிப்பிட்டது[செய்தி நிறுவனத்திற்கு உள்ள உரிமை] நம் கண்ணோட்டத்தில் தவறாக இருப்பினும், அதிருப்தி விரக்தி எல்லாம் தெரிவிப்பது தேவையற்றது எனலாம்[ஒரு செய்தியிலுள்ள சொல்லாட்சிகளில் குற்றம் கண்டுபிடிக்கும் வெட்டி வேலையைத் தவிர்த்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கான வழிவகைகளைத் தேடுவது புத்திசாலித்தனம் ஆகும்.
26 பேர் கொலை செய்யப்பட்டு ஆறேழு நாட்கள் போல ஆகியும் கொலைகாரர்கள் பற்றி[தீவிரவாதிகள் என்று குறிப்பிடவேண்டுமோ?] யாதொரு துப்பும் கண்டறியப்படாத நிலையில், மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஒன்றிய அரசு செய்யும் வேண்டாத தடாலடி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
உறுதிமொழி:
இந்தப் பதிவை வெளியிட்ட நான் 100% அதிதீவிரமான இந்தியத் தேசப் பக்தனே தவிர தேசத் துரோகி அல்ல என்று உறுதியளிக்கிறேன்[ஹி... ஹி... ஹி!!!].