//முகலாயர்கள் & டெல்லி சுல்தான்கள் பற்றிய அனைத்துப் பாடப்பிரிவுகளும் 7ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்திய வம்சங்கள், 'புனிதப் புவியியல்', மகா கும்பமேளா பற்றிய குறிப்புகளும், மேக் இன் இந்தியா மற்றும் பேட்டி பச்சாவ்[?], பேட்டி பதாவோ[?] போன்ற அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய அத்தியாயங்களும் புதியதாகச் சேர்க்கப்படவுள்ளன[https://tamil.abplive.com]//
கும்பமேளா கொண்டாட்டம் என்னும் பெயரில் மூடர்களின் எண்ணிக்கையைப் பெருக்கித் தங்களுக்கான ஆதரவாளர்களை அதிகரித்துக்கொண்ட மோடி வகையறாக்கள், இனியும் இந்த முட்டாள்களின்[மாணவர்கள் உட்பட] எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சியே பாடத்திட்டத்தில் கும்பமேளாவையும், புவியியலில் புனிதத்தையும் சேர்க்கும் நடவடிக்கை.
முகலாயர்கள் & டெல்லி சுல்தான்கள் பற்றிய அனைத்துப் பாடப்பிரிவுகளையும் நீக்குவதால் விளையும் பயன் என்ன?[நல்ல நிகழ்வுகளும் கெட்டவையும் நிறைந்ததுதான் வரலாறு. கெட்ட நிகழ்வுகள் எதிர்காலச் சந்ததியினருக்குப் படிப்பினை நல்குவதாக அமையும்> நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்> https://www.kalaignarseithigal.com/politics/2023/04/05/mughal-history-ban-on-rss-removal-of-courses-on-godse-in-cbse-syllabus-suvenkatesan-mp-condemns.
காலப்போக்கில் தங்களால் வெறுக்கப்படுபவர்கள், குறிப்பாகத் தமிழர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் பள்ளிப் பாடத்திட்டங்களிலிருந்து நீக்குவார்கள் என்பது உறுதி. மத வெறி தலைக்கேறியதன் விளைவுதான் ‘பாஜக’வின் இம்மாதிரி நடவடிக்கைகள்.
இவர்களின் அடாவடித்தனங்களை அடியோடு களைந்தெறிய, மனிதாபிமானம் போற்றுகிற அனைத்து மக்களும் தமக்கிடையேயுள்ள வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒருங்கிணைந்து போராடுவது மிக மிக அவசியம்.
* * * * *