மைசூர்(பி.டி.ஐ): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மக்களை "முட்டாளாக்குகிறார்" என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தெரிவித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றும், பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்றார் என்றும் முதல்வர் கூறினார்.
"அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது பிரதமர் அங்கு இருந்திருக்க வேண்டும். அவர் பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தார். அவர் மக்களுக்குத் 'தொப்பி' போடுகிறார்(மக்களை முட்டாளாக்குவது என்று பொருள்)" என்று சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார்[ஊடகச் செய்தி]
மோடி தொப்பி போடுகிறாரோ குல்லா அணிவிக்கிறாரோ, அதி பயங்கரமான தீவிரவாதிகளின் தாக்குதலால் நாடு நிலைகுலைந்துள்ள நிலையில், அவர் பீகார் பயணத்தைத் தவிர்த்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கமாட்டார் என்பது உறுதி.
பெரியதொரு நாட்டின் பிரதமரான அவருக்கு இது
தெரியாமல்போனது நம்மைப் பேராச்சரியத்தில் ஆழ்த்துகிறது.