செவ்வாய், 29 அக்டோபர், 2024

500 ஆண்டுகள் அலைந்து திரிந்த ராமரும் குடியமர்த்திய நம் பிரதமர் மோடியும்!!!

"500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி" என்று பெருமிதப்பட்டிருக்கிறார் மோடி.

ராமரை அமரவைத்தவர் தான்தான் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இவர் அவரை அமரவைக்காமல் இருந்திருந்தால், ஐயாயிரம், ஐம்பதாயிரம், லட்சங்கள் என்று எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன்னிச்சையாக அங்குவந்து அமரும் சக்தி ராமபிரானுக்கு இல்லை என்பதையும் யூகிக்கச் செய்திருக்கிறார்.

ஒரு முழுமுதல் கடவுள்[வைணவர் நம்பிக்கை] தனக்கான இருப்பிடம்[அயோத்தி கோயில்] இடிக்கப்பட்டபோது அதைத் தடுக்க இயலாததால் 500 ஆண்டுகள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தார் என்பதையும் சூசகமாகச் சொல்லியிருக்கிறார் மோடி.

ஆக, சுய முயற்சியால் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டுள்ளார் மோடி என்று சொன்னால் அதில் உள்நோக்கம் ஏதுமில்லை.

மிக முக்கியக் குறிப்பு:

என்றோ[500 ஆண்டுகளுக்கு முன்பு] நடந்ததாகச் சொல்லப்படும் அயோத்தி ராமர் கோயில் இடிக்கப்பட்ட நிகழ்வை[500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள தனது அற்புதமான கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி. பல தலைமுறையினர் இந்தத் தீபாவளிக்காகக் காத்திருக்கின்றனர். பலர் அதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் அல்லது துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்-tamil.oneindia.com] நினைவுபடுத்தி மத வெறியைத் தூண்டும் மோடியின் கூற்றே இப்பதிவு உருவாகக் காரணமாக அமைந்தது.

* * * * *

https://tamil.oneindia.com/news/delhi/after-500-years-ayodhya-to-celebrate-first-diwali-with-lord-ram-says-pm-narendra-modi-650605.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include