எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 18 அக்டோபர், 2024

தேவை ஓராண்டு இந்தி அழிவு விழா!!!

‘பொதிகை’யை ‘DD தமிழ்’ என்று பெயர் மாற்றம் செய்த ‘மோடி-அமித்ஷா’ இந்தி வெறிக் கும்பல், இந்தத்  தமிழ் தொ.கா.வில் ஒரு மாத இந்தி[வளர்ப்பு] விழா கொண்டாடிக் குதூகளித்திருக்கிறது.

ஒப்புக்குத் தமிழ் என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டு இதை இந்தி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதைத் தமிழினத் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

இன்றைய அதற்கான நிறைவு விழாவில் ‘நரிரவி’ கலந்துகொள்கிறதுறார் என்பது செய்தி.


இந்தியா என்னும் இந்த நாடு உடைந்து சிதறி மாநிலங்கள் ‘சுயாட்சி’ பெற்றாலொழிய ‘இந்தி வெறி’யன்களின் கொட்டத்தைக் கட்டுப்படுத்தவே இயலாது.

அந்த நல்ல காலம் வெகு விரைவில் மலரும் என்று நம்புவோம்.

அதுவரை, ‘சன்’, ‘பாலிமர்’, ‘புதிய தலைமுறை’ போன்ற தமிழ்த் தொலைக்காட்சிகளில், ஓராண்டு ‘இந்தி அழிவு விழா’ நடத்தி, நம் இந்தி எதிர்ப்பு உணர்வை வடக்கன்களுக்குத் தெரிவிக்கலாம்.

தமிழின் தொ.கா. உரிமையாளர்கள் இதைக் கவனத்தில்கொண்டு தீவிரமாகச் செயல்படுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்!