திங்கள், 7 அக்டோபர், 2024

‘ஆர்.எஸ்.எஸ்.’... சீருடை சிறப்பு! மிடுக்கான நடை நன்று!! கையில் நீள் தடி எதற்கு!?

ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தமிழர்களும் கலந்துகொள்ள, வடக்கத்தி ‘ஆர்.எஸ்.எஸ்.’காரர்கள் சென்னையில் ஊர்வலம் நடத்தியுள்ளார்கள்[ஊடகச் செய்தி].


பேரணியின் நிறைவில் ‘உறுதிமொழி’ எடுத்துக்கொண்டார்களாம். அதென்ன உறுதிமொழி?

ஊடகங்கள் மூலம் அறிய இயலவில்லை என்றாலும், அவற்றை அனுமானிப்பது மிக எளிதுதான். 

உறுதிமொழி[கள்]:

இந்திய நாட்டை ‘இந்து சாம்ராஜ்ஜியம்’, அல்லது ‘ராம ராஜ்ஜியம்’ ஆக்குவது, ஒரே நாடு, ஒரே தேர்தல் போல இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை அரியணை ஏற்றுவது, இந்தியா எங்கும் ‘இந்தி’க்காரர்களின் கலாச்சாரத்தை உத்வேகத்துடன் பரப்புவது, இந்துக்கள் அல்லாத பிற மதத்தவரையும், இந்துமத எதிர்ப்பாளர்களையும் நாட்டைவிட்டே துரத்தியடிப்பது போன்றவை.

மேற்கண்டவாறு ஊர்வலத்தின்போது உறுதிமொழி எடுக்கும் ‘ஆர்.எஸ்.எஸ்.’காரர்கள் சீருடையில் அணிவகுத்து ஏறு போல் பீடு நடை பயிலும்போது கைகளில் நீளமான ‘தடி’ ஏந்துகிறார்களே, அது எதற்கு?

அவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை அடித்துத் திருத்துவதற்காக இருக்கலாம்.

தேவைப்பட்டால், எதிர்காலத்தில், தடிகளுக்குப் பதிலாகச் சக்தி வாய்ந்த துப்பாக்கிகளை ஏந்துவார்கள் என்று நம்பலாம்.

அவர்களை எதிர்ப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்!