செவ்வாய், 8 அக்டோபர், 2024

கொலை வெறியர்களின் கூடாரம் ஆகிறதா ‘பாஜக’!?!?!

தங்கள் கட்சிதான்[பாஜக] நாட்டை ஆளுகிறது என்னும் திமிரில், “போராட்டக்காரர்களில் 10-20 பேரைக் காவலர்கள் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறான் நந்த் கிஷோர் குர்ஜார்[எம்.எல்.ஏ]  என்னும் ரவுடி.

போராட்டக்காரர்கள் பிறர் உடைமைகளைக் கொள்ளையடித்தவர்கள் அல்ல; மாறுபட்ட கொள்கையாளர்களைக் கொலை செய்தவர்களும் அல்ல.

அவர்கள் கோயிலின் மீது கற்களை வீசியது குற்றச் செயல்தான் என்றாலும், அது பெரிய தண்டனைக்குரிய குற்றம் அல்ல[சக மனிதர்கள் மீது கற்களை வீசுவதுதான் குற்றம்; மனிதர்கள் வைத்த சாமி சிலை மீது கற்களை வீசியிருந்தாலும், அதனால் கண்ணுக்குத் தெரியாத சாமிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது; சாமி கோபிக்காது].

பாஜக தலைமை கடும் தண்டனைக்குரிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருகிறது என்பது இவன் அக்கட்சியைச் சார்ந்தவனாக இருப்பது ஓர் உதாரணம்.

இவன் மிகக் கடுமையான தண்டனைக்குரியவன்.

மோடி இவனைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா, அல்லது, மணிப்பூர் கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்தது போல் இருந்து, இவனைப் போன்ற கொலை வெறியர்களின் எண்ணிக்கை[‘பாஜக’வில்] அதிகரிக்க வழிவகுப்பாரா?