கீழேயுள்ள காணொலியில், அடையாளப்படுத்தவே இயலாத திட்டுத் திட்டான திடப்பொருளாக ஒழுங்கற்ற வடிவில்[சிறு சிறு குழிகளுக்கிடையே விரல்கள் மட்டுமே ஓரளவு சரியான வடிவில் உள்ளன] ஏதோ ஒன்று தென்படுகிறது. அது ஏசுவின் காலடி[நமக்குத் தேவையற்ற மற்ற விவரங்களைக் காணொலியில் காணலாம்] என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்[காணொலி உரை].
ஒரு நூறு தடவை[ஹி... ஹி... ஹி!!!] அந்த ‘அதை’ உற்று உற்றுப் பார்த்து ஆராய்ந்ததில்.....
இறைத் தூதர் ஏசுநாதர் இங்கிருந்து மேலெழும்பி விண்ணகம் நோக்கிச் சென்றபோது பதிவான அவரின் ஒரு பாதம் இது என்றால், அவர் மேலெழும்புவதற்கு முன்னால் தரையில் ஊன்றிய இன்னொரு பாதச் சுவடு பதிவாகாதது ஏன் என்று கேட்கத் தோன்றியது.
இன்னொரு[இடது] பாதச்சுவடு ஒரு பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் காணொலியில் சொல்லப்படுகிறது.
நம் சந்தேகங்கள்:
வலது பாதச் சுவட்டை ஏன் விட்டுச்சென்றார்கள்?
ஏசுப் பெருமானின் பாதச்சுவடு மிகப் பல ஆண்டுகளாக அழியாதிருப்பது எப்படி? கல்லில் பதிவாகியுள்ளது என்றால் அது எப்படிச் சாத்தியம்? அவர் நடந்துவந்தபோது அடுத்தடுத்துப் பதிவான சுவடுகள் அருகில் பதிவாகாதது ஏன்?
மனிதர்கள் மட்டுமல்லாமல், கழுகு, குரங்கு, பாம்பு, யானை, பூனை என்று எதையெதையோ கடவுளாக்கி வழிபடும் இந்துக்கள்தான் உலகின் ஈடு இணையற்ற முட்டாள்கள் என்று நாம் நம்பியிருந்த நிலையில்.....
கொஞ்சமும் புரிந்துகொள்ளவே இயலாத ஒழுங்கற்ற திடவடிவிலான ஏதோ ஒன்றைக் கடவுளின்[வணங்கப்படும் ஏசு] பாதச்சுவடு என்று வியந்து போற்றி வழிபடும் கிறிஸ்தவர்கள்[ஒரு சாரார்?] அந்த நம்பிக்கை 100% தவறானது என்று நிரூபித்திருக்கிறார்கள்.
கர்த்தர் இவர்களைத் திருத்தியருள்வாராக!
***காணொலிக்கான குறிப்பிடத்தக்க சில கருத்துரைகள்[‘யூடியூப்’இல்]: