சனி, 12 அக்டோபர், 2024

யாரந்த வைட்டமின் திருடன்?!

சர்க்கரை[குறிப்பாக‘வெள்ளை’]  சேர்த்த இனிப்புப் பண்டங்களை நாம் விரும்பி உண்கிறோம். இதனால் விளையும் பெரும் தீங்கு குறித்துப் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை.

அதென்ன பெரும் தீங்கு?

நாம் உணவோடு சேர்த்து உண்ணும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் நம் உடல் நலத்திற்கும் உடம்பின் இயக்கத்திற்குத் தேவையான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.

அளவுக்கு மேல் நாம் சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது, சர்க்கரைக்கான வைட்டமின் தேவை[சக்தியாக மாறுவதற்கு] அதிகரிப்பதால், அது உணவிலுள்ள வைட்டமின்களை அதிக அளவில் எடுத்துக்கொள்கிறது. இதனால், காய்கறி, பழங்கள் ஆகியவற்றால் நாம் பெறும்[வைட்டமின்] பயன் வெகுவாகக் குறைகிறது.

இதனால்தான் சர்க்கரையை, ‘வைட்டமின் திருடன்’ என்கிறார்கள் மருத்துவர்கள்!

தேவைக்கு மேல் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரை நம் உடம்பில் உண்டாகும் பல குறைபாடுகளுக்கு[குறிப்பாக நோய்களுக்கு] முக்கியக் காரணமாக உள்ளது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது!

                                 *   *   *   *   *

உதவி: