திங்கள், 14 அக்டோபர், 2024

“சட்டம் இனி எங்கள் கையில்” -மோகன் பகவத்!... மோடி இவனைத் தண்டிப்பாரா, தாங்குவாரா?

//இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கோ, அவர்களது வழிபாட்டிற்கோ ஏதேனும் ஒரு சிறு இடையூறு வந்தாலும் அரசை அணுகாமல், சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் தாங்களாகவே களத்தில் இறங்கி, தங்களுக்கான நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்//[நாக்பூர் நிகழ்வில் ‘ஆர்.எஸ்.எஸ்’ மோகன் பகவத் பேச்சு] https://tamil.oneindia.com/news/

ஒன்றிய அரசின் சட்டதிட்டங்களை ஒட்டுமொத்தமாய் நிராகரிக்கிறான் இந்த இந்து வெறியன்; அதாவது இந்தியச் சட்டம் இனி எங்கள்[இந்து வெறியர்கள்] கையில் என்கிறான்.

சட்டத்தைக் கையில் எடுப்பதன் மூலம், சிறுபான்மை மதத்தவர்களால் இடையூறு நேர்வதாகப் பொய் பரப்பி, அவர்களைத் தாக்கி இந்த நாட்டைவிட்டே விரட்டியடிப்பது இவன் நோக்கம்.

இவனின் அடுத்த குறி, மதச்சார்பின்மைக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களை[நமது நாட்டின் அடிப்படையான மதச்சார்பின்மைக் கோட்பாட்டை முன்னெடுக்கும் அரசியல் கட்சியினரைச் 'சுயநலமிகள்' என்றும் பேசியிருக்கிறான்]  அடக்கிப் பணியச் செய்வது. அடங்காமல் எதிர்த்துப் போராடினால் அவர்களையும் நாட்டைவிட்டே விரட்டுவது.

இவன் இப்படிப் பேசியது சில நாட்களுக்கு முன்பு.

வேறு யாரேனும்[ஆர்எஸ்எஸ் அல்லாத பிறர்] இப்படிப் பேசியிருந்தால் சிறையில் தள்ளிக் கம்பி எண்ண வைத்திருப்பார் மோடி. விதிவிலக்காக முழுச் சுதந்திரத்துடன் இவனை நடமாட அனுமதித்திருக்கிறாரே அவர், அதன் ரகசியம்தான் என்ன?

இவன் மாதிரியான வெறியர்களைச் சுதந்திரமாகப் பேசவிட்டு, இந்தியாவை விரைவில் ‘இந்து சாம்ராஜ்ஜியம்’ ஆக்கிட ஆசைப்படுகிறாரோ?

“ஆம்” என்றால் அது வெறும் ஆசையல்ல; பெரும் பேராசை! அது அத்தனை எளிதில் நிறைவேறாது!!

மிக முக்கியக் குறிப்பு:

இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் நாம் எழுதிய பதிவு இது!

                                     *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/cpm-slams-rss-chief-mohan-bhagwats-speech-deliberately-inciting-communal-violence-646119.html