வியாழன், 17 அக்டோபர், 2024

மூடநம்பிக்கை வளர்ப்பில் முக்கியப் பங்காற்றும் ஊடக மூடர்கள்!!!

பருவ இதழ்களிலாகட்டும்[பக்திச் செய்திகளுக்கான இணைப்புகள்], இணையங்களிலாகட்டும் மூடநம்பிக்கையை வளர்ப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் ஊடகக்காரர்களே[குறிப்பாக, பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்கிற ‘முரசொலி மாறன்’ வாரிசுகள், தினமலர்க்காரன் போன்றவர்கள்] இவர்களோடு ஒப்பிடும்போது பக்தி வளர்க்கும் ஆன்மிகர்களின் பங்கு வெகு அற்பம்.

ஓர் எடுத்துக்காட்டு:
 
கன்னியாக்குமரியில் கடல் உள்வாங்கும்போதெல்லாம் ஏற்கனவே ஆங்காங்கே மூழ்கிக் கிடக்கும் உடைந்த/உடையாத கற்சிலைகள் தென்படுவதுண்டு. 

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

கன்னியாகுமரியில் ஓரிரு நாட்களாகக் கடல் நீர் உள்வாங்கியதால், வழக்கம்போல் சிலைகள் தென்படுவதை, முருகன் அருளால் அவை நிகழ்ந்ததாகக் காணொலி மூலம் கதை அளந்திருக்கிறான் ‘புதிய தலைமுறை[செய்தி ஊடகம்]க்காரன்.

காணொலி:


முருகன் போன்ற கடவுள்களின் திருவிளையாடல்களைக் கண் முன் நிறுத்துகிற இந்த ஊடகர்கள் கடவுள்களிடம் சொல்லி கடலுக்குள்ளும் ஆறுகளுக்குள்ளும் மூழ்கிக் கிடக்கிற அத்தனைச் சிலைகளையும்  மக்கள் காணும் வகையில் மிதக்கச் செய்வார்களா, சில மணி நேரங்களேனும்?!