தமிழ்நாடு மட்டுமின்றித் தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் இந்தித் திணிப்பிற்கு[இந்தி மொழிப் பாடத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தனர்] எதிராகக் கர்நாடகாவில் உள்ள பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். இந்தி எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
மெட்ரோ ரயில் போன்ற பொது இடங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் கன்னட அமைப்புகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன.
இதனிடையே, கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின்[மிகவும் பெரியது] அறிவிப்புப் பலகையில், சத்தமே இல்லாமல் இந்தி மொழி அதிரடியாக நீக்கப்பட்டுக் கன்னடமும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கன்னட மொழியின் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் உள்ளதால், அது குறித்து அங்குள்ள கன்னடர்களும், கன்னட அமைப்பினரும் மிக அதிக அளவில் கவலையடைந்திருக்கிறார்கள்.
இதன் விளைவுதான் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை.
இந்த நடவடிக்கையைச் சமூக வலைதளங்களில் கன்னட அமைப்பினர் கொண்டாடிவருகின்றனர்.
https://minnambalam.com/hindi-removed-at-bengalurus-kempegowda-airport/