சனி, 12 ஏப்ரல், 2025

தமிழைப் புறக்கணித்து ஆங்கிலம் பேசும் தமிழனும் தாய்மொழி காக்கும் மராட்டியனும்!

காராஷ்டிரா, டோம்பிவ்லியில் இரண்டு பெண்கள் தாங்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, “இனிமேல் இங்கு மராத்தி மொழியில் மட்டும்தான் பேசவேண்டும்” என்று கூறினார்.

அந்தப் பெண்கல், மராத்தி தெரிந்தவரெனின், "சரி” என்று பதிலளித்துவிட்டுச் சென்றிருக்கலாம்.

மாறாக, “எக்ஸ்கியூஸ்மீ" என ஆங்கிலத்தில் கூறியுள்ளார் ஒரு பெண்..

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், எக்ஸ்கியூஸ்மீ என மரத்தியில் சொல்ல முடியாதா எனக் கேட்டு 2 பெண்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞருடன் சிலர் சேர்ந்துகொண்டு இரண்டு பெண்களையும் தசரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அந்தப் பெண்கள் காவல்துறையினரிடம் இது குறித்துப் புகாரளித்துள்ளனர்.

அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது[ibctamilnadu.com/ ].

maharashtra

மராட்டிய இளைஞர்கள் பெண்களைத் தாக்கியது கண்டிக்கத்தக்கது என்றாலும், அவர்களை வழிமறித்துத் தங்கள் தாய்மொழியில்  பேசும்படிச் சொன்னதற்குக் காரணம், அந்த அளவுக்கு அங்கே அவர்களின் தாய்மொழியான ‘மராட்டி’  புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அறியத்தக்கது.

தாய்மொழியைப் பாதுகாத்து வளர்க்க இம்மாதிரியான தீவிர நடவடிக்கைகள் தேவையே.

மராட்டி இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பெரிதும் வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியூட்டுவதும் ஆகும்.

“தமிழ் வாழ்க! தமிழ் வெல்க” என்று வெறுமனே வாய் கிழியக் கூச்ச போட்டுக்கொண்டு, தப்பும் தவறுமாகவேனும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையே வழக்கமாக்கியுள்ள தமிழர்கள்[குறிப்பாக இளைஞர்கள்] மேற்கண்ட இளைஞர்களிடமிருந்து பாடம் கற்பது மிக அவசியம்.

                                                  *   *   *   *   *

https://ibctamilnadu.com/article/omen-attacked-for-refusing-to-speak-marathi-viral-1744286539?itm_source=parsely-api