எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 12 ஏப்ரல், 2025

அண்ணாமலையை அவமானப்படுத்திய ‘உள்குத்து’ அமைச்சர் அமித்ஷா!!!

ஆகப் பெரிய மூடநம்பிக்கைக் கட்சியினரின் ஆயுட்கால அடிமையான அண்ணாமலை புத்திசாலியோ அல்லவோ, அவர் மிக மிக மிக நல்லவர்; அப்பாவி; சூதுவாது இல்லாதவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

[இத்தனைப் பணிவு எதற்கு அண்ணாமலை?]

அவமானங்களைப் பொருட்படுத்தாமல் ‘பாஜக’ வளர்ச்சிக்காக இவரளவுக்கு இதுவரை எந்தவொரு த.நா. பாஜக தலைவரும் பாடுபட்டதில்லை.

எவரொருவர் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தாலும், இந்த மண்ணில் இக்கட்சி வளரவே வளராது என்பது புரியாத அமித்ஷா, அண்ணாமலையின் தலைவர் பதவியைப் பறித்தார்; இந்திய அளவில் உயர் பதவியொன்றில் அவர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்த அந்த ‘உள்குத்து’ அமைச்சர், தேசியப் பொதுக் குழு உறுப்பினராக அண்ணாமலையை நியமித்துள்ளார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு உதவியாளருக்கு[பழைய பெயர் ‘பியூன்’] உள்ள அதிகாரம்கூட இந்த உறுப்பினருக்கு இல்லை என்பது 100% உண்மை.

அ.மலை மட்டும் உறுப்பினர் ஆக்கப்படவில்லை; எச்சில் ராஜா, தமிழிசை, பொன்னார், எல்.முருகன், வானதி என்று ஒரு பெரிய பட்டாளமே இந்த உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாவம் அண்ணாமலை.

‘பாஜக’வின் நம்பர் 2 தலைவர் அமித்ஷாவைவிடவும் வேறு எவரும் இவரை இந்த அளவுக்கு இழிவுபடுத்த இயலாது.

அண்ணாமலைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

* * * * *

https://minnambalam.com/annamalai-get-new-post-in-bjp-when-nainar-become-bjp-president/