வியாழன், 17 ஏப்ரல், 2025

வறுமையில் வாடும் சாதியாருக்கு அரசாங்கச் செலவில் கோயில்!!![பரிந்துரைப் பதிவு]


“கடவுள் என்றொருவர் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஏன் இப்படிக் கண்ட கண்ட சாமியின் பெயரால் அடித்துக்கொள்கிறீர்கள்?என்று பகுத்தறிவு பேசி அறியாமையில் உழலும் மனிதர்களைத் திருத்துவது இயலவே இயலாது.

எத்தனை எத்தனைப் பெரியார்கள் வந்து, இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்குப் பரப்புரை செய்தாலும், இவர்களைத் திருத்துவது அத்தனை எளிதல்ல.

மேற்கண்டது[காணொலி] போன்ற பிரச்சினைகள் எங்குமே எழாமலிருக்க, அனைத்துக் கிராமப்புறக் கோயில்களையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, விழாக்கள் நடத்தும் பொறுப்பையும் ஏற்கலாம்.

ஆனால், கோயிலுக்கு உரிமை கொண்டாடும் ஜாதிக்காரகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்[தேர்தலில் வாக்களிக்கமாட்டார்கள்] என்பதால் இது சாத்தியமே இல்லை.

எனவே, இது மாதிரியான நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு, எந்தெந்த ஊரிலெல்லாம் எந்தெந்தச் சாதியாருக்குக் கோயில் இல்லையோ அந்தந்தச் சாதியாருக்கென்று அரசாங்கம் தனித் தனிக் கோயில் கட்டிக் கொடுக்கலாம்[சாதிக்காரர்களின் எண்ணிக்கையைப் பொருத்து கோயில் எழுப்ப ஆகும் செலவை நிர்ணயிக்கலாம்?].

தங்களுக்கான கோயிலைத் தவிர பிற சாதிக்காரர்களின் கோயிலுக்குள் அவர்களின் அனுமதியில்லாமல் நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்தல் மிக அவசியம்.

திருந்தவே திருந்தாத முட்டாள்களை அவர்கள் வழியில் சென்று திருப்திப்படுத்தினால் மட்டுமே, சாமிகளின் பெயரால் நிகழும் மோதல்களைத் தடுத்திட இயலும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.