எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

அந்த ‘ஜந்து’வைத் திருத்துவது தன்மானத் தமிழர்களின் கடமை!!!

சனிக்கிழமையன்று மதுரைக் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிய அந்த ‘ஜந்து’, ​​இந்துக் கடவுள் ராமருக்கு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்தது.

அது "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல,  மாணவர்களும் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டார்கள்’ -இது ஊடகச் செய்தி.

உச்ச அதிகாரம் படைத்தவர்கள் கண்டித்தும் திருந்தாமல், தொடர்ந்து அந்த ஜந்து திமிர்த்தனமாய் நடந்துகொள்வதற்குக் காரணமாக இருக்கும் அந்த ‘இரட்டையர்கள்’ யாவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

மக்கள் மனம் வைத்தால் மட்டுமே அந்த நச்சுப் பாம்பு திருந்தும்; அதை ஆட்டுவிக்கும் அந்த அடாவடியர்களும் திருந்துவார்கள்!