உலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டரின் வாழ்வில் இடம்பெற்ற கீழ்க்காணும் நிகழ்வை, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருப்பினும், நினைவுகூர்வதில் தவறேதும் இல்லை.
ஒட்டுமொத்த உலகையும் வெல்லும் ஆசையில் படை நடத்திச் சென்ற அலெக்சாண்டர், எதிர்ப்பட்ட நாடுகளையெல்லாம் வென்றான். அவனுடனான சமருக்கு அஞ்சிச் சமரசம் செய்துகொண்ட மன்னர்கள் பலர். அவர்களுள் பாரசீக மன்னனும் ஒருவன். அவன், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த தங்கப்பேழை ஒன்றினை அலெக்சாண்டருக்குப் பரிசளித்தான்.
ஈடுஇணையற்ற அந்த அற்புதப் பேழையைத் தன் வீரர்களிடம் காட்டி மகிழ்ந்த அலெக்சாண்டர், ''இதைவிட உயர்ந்த பொருளைத்தான் இந்தப் பேழையில் வைத்திட வேண்டும். தரத்தில் குறைந்த எதனையும் இதில் வைப்பது இதனை அவமதிப்பதாகும். இதனுள் வைக்கத்தக்க அரிய அந்தப் பொருள் எது? சொல்லுங்கள்'' என்று கேட்டான்.
எவரொருவரும் சரியான பதில் தரவில்லை. அலெக்சாண்டரே சொன்னான்.....
''இதனுள் வைப்பதற்கான தகுதி பெற்ற ஒரே பொருள் 'ஹோமரின் இலியட்' காவியம்தான்.''
அலெக்சாண்டர் மாவீரன் மட்டுமல்ல, விலைமதிப்பற்ற படைப்புகளை [நூல்கள்] மதிக்கத் தெரிந்தவன் என்பதையும் இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.
நம்மிடமும் தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற விலைமதிப்பற்ற படைப்புகள் உள்ளன. தங்கப்பேழைகளில் வைத்து இவற்றைப் போற்றாவிடினும், நம் மனப் பேழைகளில் வைத்தேனும் போற்றிட வேண்டும்.
போற்றுகிறோமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உண்மைதான் ஐயா
பதிலளிநீக்குநாம் நம் மனப் பேழையில் வைத்துப் போற்றிட வேண்டும்
நன்றி ஜெயக்குமார்.
நீக்குஎங்களுக்கு எங்களைக் கவனிக்கவே நேரம் போதவில்லை:) இதில பழமையைப் போற்று காவியத்தைப் பேணு என்றால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குஅதிராவா இப்படிச் சொன்னது? ஊஹூம்...நான் நம்பவே மாட்டேன். எதிரிகள் ஏதோ சதி[பில்லி சூனியமாக இருக்கலாம்] செய்திருக்கிறார்கள்.
நீக்குஎன்னாதூஊஊஊஊஊஊஉ சூனியக் கிளவியை அனுப்பிட்டினமோ அதிராவுக்கு:)) நினைச்சேன் நினைச்சேன் இது என் செக்:) உடைய ஜதியாத்தான் இருக்கும்:))
நீக்குஉண்மைதான் நண்பரே இந்தக் கேள்விக்கு சமூகம் பதில் சொல்வது கடினமே...
பதிலளிநீக்குபோற்றாவிட்டாலும் பரவாயில்லை; தூற்றாமலிருந்தால் போதுமே.
நீக்குநன்றி நண்பரே.
சமூகம் இருக்கட்டும் முதலில் கில்லர்ஜி யைப் பதில் ஜொள்ளச் ஜொள்ளுங்கோ அறிவுப்பசிஜி:))
நீக்குகில்லர்ஜிக்கு ஜொள்ளுவது பிடிக்குமா? சொல்லுவாரா பார்க்கலாம்.
நீக்குநன்றி அதிரா.
அதிரா நான் சொல்வதைவிட, செயல்படுவதில் ஈடுபாடு உள்ளவன்.
நீக்குஎன்னளவில் நான் போற்றுவதில் இடம் பெறுவேன்.
போற்றுதலுக்குரிய பதில். உங்களைத் தன்னிலை விளக்கம் தரவைத்த அதிராவும் போற்றுதலுக்கு உரியவரே.
நீக்குநன்றி நண்பரே.