வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

‘இது’க்கு ஏன் நினைவுகூர்தல் தினம் இல்லை?!

முதியோர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், காமுகர் தினம்[ஹி...ஹி...ஹி!] என்றெல்லாம் உலகளவில் சிறப்பு ‘நினைவுகூர்தல்’ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

இவற்றோடு, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினமும் கொண்டாடப்படுதல் வேண்டும்.

நிரூபிக்கவே இயலாத கடவுளைப் பற்றிச் சிந்தித்ததால் ஆன்மிகம் போற்றும் மதங்கள்[விதிவிலக்கானவை உள] பல தோன்றின. கருத்து வேறுபாடுகள் காரணமாக அவற்றிடையே மோதல்கள் நிகழ்ந்தன; போர்கள் வெடித்தன; உலகம் பெரும் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.

சுருங்கச் சொன்னால், கடவுளைப் போற்றும் மதங்களால் விளைந்த நன்மைகளைக் காட்டிலும் நேர்ந்த தீமைகள் மிக மிக மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டுதான் பெரியார், “கடவுளை மற; மனிதனை நினை”[பெரியாரை வெறுப்பவர்கள் பெரியாருக்குப் பதிலாகப் ‘பெரியவர்கள்’ஐச் சேர்த்துக்கொள்ளலாம்] என்றார்.

ஆண்டுதோறும், பல மூடநம்பிக்கைகளுக்குக் காரணமான  கடவுளை மறந்து, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினம் கொண்டாடப்பட்டால்.....

மனிதப் பண்பு சிறக்கும். சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் உருவாகும் வேறுபாடுகள் மறையும். மக்களிடையே மோதல்கள் இல்லை; போர்கள் இல்லை; பேரழிவுகளும் இல்லை.

சுருங்கச் சொன்னால்.....

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழ்வார்கள்[பிற உயிர்களுக்கு உதவுவதும் நிகழும்].

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழும் காலம் வருமா?

‘வரும்’ என்று நம்புவோம். 
=======================================================================