எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

‘நாத்திகம் போற்றுவோம்!’[33ஆவது நூல்]...அமேசான் விற்பனையில்!

‘நாத்திகம் போற்றுவோம்!’, அமேசான் கிண்டிலில் நான் வெளியிட்டுள்ள 33ஆவது நூல் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

நன்றி.

நூலின் ‘முகப்பு உரை’.....

#வேதங்களில் இட்டு நிரப்பப்பட்ட மந்திரங்களைத்தான் நம் மக்கள், தாம் நடத்தும் திருமணங்களிலும், புதுமனைபுகும் விழாக்களிலும், குடமுழுக்கு நிகழ்வுகளிலும், மழை பெய்வித்தல் போன்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் யாகங்களிலும், அன்றாடம் கோயில்களில் நடத்தப்படும் வழிபாடுகளின்போதும் வேத சாஸ்திரம் படித்த வேதியர்களை ஓதச் செய்கிறார்கள்.

அந்தக் காலத்து ‘உலகாயதர்’ போன்ற அறிவுலக மேதைகளும், அண்மைக்காலம்வரை வாழ்ந்து மறைந்த பெரியார் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்குப் பட்ட பாடு வீணாகிப் போனதா?

உங்களின் பதில் எதுவாயினும், இனியேனும் அவர்களின் பாடு வீணாகிவிடாமல் தடுப்பது நம் கடமை என்பதை அருள்கூர்ந்து உணருங்கள்#

Included with Your Kindle Unlimited
Or ₹49 to buy