அவள் பெயர் ‘அனிகோ ரோஸ்’; இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிப்பவள்.
இவள் செய்வது ‘கட்டிப்பிடி’ வைத்தியமாம்!
இப்படியொரு புதுமையானதும் சர்ச்சைக்குரியதுமான வைத்திய முறை இங்கிலாந்தில் இருப்பது உண்மைதானா என்னும் கேள்வி தவிர்க்க இயலாததாக உள்ளது.
உண்மையே என்றாலும், கட்டிப்பிடிக்கப்படும் ஆண் அடுத்த கட்ட நகர்வுக்கு[உடலுறவு]த் தூண்டப்பட்டு அதற்கு அவள் அனுமதி மறுப்பாளாயின், அவனின் மன அழுத்தம் பல மடங்கு அதிகம் ஆகும்.
பலரைக் கட்டிப்பிடித்துச் சிகிச்சையளிக்கிறவளும் பாலுணர்ச்சியால் தூண்டப்பட்டு, ஒரு கட்டத்தில் அவளே மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகும்.
கட்டுப்படுத்த இயலவில்லை எனின், அவள் முழுநேர விலைமகள் ஆவாள். அல்லது முழுப் பைத்தியமாக ஆகக்கூடும்.
எது எப்படியோ,
மேற்கண்ட 42 வயதுக்காரியின் மீது இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக அறியப்படவில்லை.
நடவடிக்கை ஏதும் இராது எனின், இவளைப் போன்ற ‘சல்லாபத் தொழில்’காரிகளின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்க வாய்ப்புள்ளது. இளவயசுக்காரிகள் பலரும் இத்தொழில் இறங்குவார்கள்; கோடிகளில் புரளுவார்கள்.
மற்ற நாடுகளில் எப்படியோ, இந்தப் புண்ணியப் பூமியில்[இந்தியா] இந்தக் ‘கட்டிப்பிடித் தொழில்’ எப்போது தொடங்கப்படும்?!?!
* * * * *