கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

‘அவர்கள்’ அதிபுத்திசாலிகள்! நாம் அடிமுட்டாள்கள்!!

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் தமிழ் இடம்பெற்ற நாளிலிருந்து ‘அவர்களில்’ சிலருக்கு உச்சி முதல் உள்ளங்கால்வரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.  தம் ஆற்றாமையை நாளிதழ்களில், கட்டுரைகள் எழுதியும்  ஆசிரியருக்குக் கடிதங்கள் வரைந்தும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சமஸ்கிருதம்  சிவபிரான் பயன்படுத்திய மொழியாம்[தமிழ், அரக்கர்கள் பயன்படுத்திய மொழியோ?!] ஆகமங்கள் இறைவழிபாட்டுக்கென்றே இறைவன் உணர்த்தியதாம்!!! -அவர்களில் ஒருவர் இப்படிப் 'புருடா’ விட்டிருக்கிறார்!!!

தினமணி நாளிதழில் வெளியான அது தொடர்பான கடிதம்:காலங்காலமாய், அவர்கள் பரப்புரை செய்த ஏராள பொய்க்கதைகளை ஏற்று வாழ்ந்தார்கள் பெரும்பான்மைத் தமிழர்கள். இன்றளவும் அந்தத் தமிழர்களின் எண்ணிக்கை குறையாமலிருப்பதே இம்மாதிரிக் கடிதங்களை த்தியமூர்த்திகள் எழுதிக்கொண்டிருப்பதற்குக் காரணம் ஆகும்.

கீழே காண்பது மேற்கண்ட கடிதத்திற்குப் ‘பதிலடி’ தருவதாக அமைந்துள்ளது.


புலவர் ச.மு.விமலானந்தன் அவர்களுக்கு நம் நன்றி.
=======================================================================