ஞாயிறு, 8 ஜூன், 2025

கோவை[தெற்கு] ‘பாஜக’காரர்கள் அத்தனைப் பேரும் கன்னடர்களா?!

'தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி, கன்னட மொழி விரோதி கமலஹாசன் என்றெல்லாம் குறிப்பிட்டு, அவரை மட்டுமல்லாமல் ‘தி.மு.க’ வையும் கண்டித்துப் ‘பா.ஜ.க’ வினர் கோவையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது' என்பது செய்தி[https://tamil.indianexpress.com]

சுவரொட்டி[போஸ்டர்]:


‘கவுடா’என்னும் பெயரே இந்தப் போஸ்டர் அடித்த நபர் கன்னடன் என்பதை உறுதிப்படுத்துகிறது; ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’[தமிழ் உயிர் மொழியாம். யாரை முட்டாளாக்க?] என்கிறார்.

இவருக்கு[கவுடா]க் ‘கன்னடம்’தான் தாய்மொழி என்பது சொல்லித் தெரிவதில்லை. 

கமல்காசனை மட்டுமல்ல, ‘தி.மு.க.’வையும் கண்டிப்பது இவர் நோக்கம். கண்டிக்கட்டும். அது அவர் ஆசை.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள, ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’ என்னும் சொற்றொடரில் உள்ள ‘எங்கள்’ என்னும் ஒரு சொல்தான் நம் நெஞ்சில்  நெருடலை உண்டுபண்ணுகிறது.

அந்த ‘எங்கள்’ கோவை[தெற்கு] ‘பாஜக’ கட்சியினரைத்தான் குறிக்கிறது. ‘கவுடா’விடம் நாம் கேட்க விரும்புவது.....

“கன்னட கவுடரே,

கோவை, தெற்கிலுள்ள அத்தனைப் ‘பாஜக’ காரர்களுமே கன்னடர்கள் என்கிறீரா?”

“ஆம்” என்பதுதான் கன்னடனான உம்முடைய பதிலாக இருக்கமுடியும். 

கவுடாவிடம் மட்டுமல்ல, கோவையிலுள்ள ’பாஜக’ கட்சித் தமிழர்களிடமும் நாம் கேட்க விரும்புவது.....

“தமிழர்களே, கன்னடன் சந்திரசேகர் கவுடா சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?”

                                      *   *   *   *   *