//திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் 10.06.2025ஆம் தேதி மதியம் 12.32 மணியிலிருந்து 11ஆம் தேதி மதியம் 1.58 மணிவரை// என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
சிவபெருமான் என்று சொல்லப்படும் கடவுள் ’திருவண்ணாமலை’ என்னும் ஊரில் மலை உருவில் காட்சியளிக்கிறார்[ஆண்டவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்னும் கதை காலாவதி ஆனதோ?!] என்று எப்போதோ எவனோ ஓர் அயோக்கியன் கட்டிவிட்ட கதையை நம்பி, அந்தக் கல்மலையைச் சுற்றிவந்தால்[கிரிவலம்] நினைத்த காரியம் நிறைவேறும் என்று எண்ணி, தினம் தினம் அதைச் சுற்றிவருகிறார்கள் மனித மந்தையர்கள்.
விசேட நாட்கள் என்றால், கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு வந்து குவிகிறார்கள். அண்ணாமலையானைத் தரிசிக்க மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் காத்திருக்கிறார்கள்.
வைகாசிப் பௌர்ணமி நாளில் அவனைத் தரிசிக்க 8 மணி நேரம்போல்[திருப்பதி என்றால் நாள்கணக்கில்] பக்தர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது கீழே இடம்பெற்றுள்ள காணொலி.
துணிக் கடையோ, மளிகைக் கடையோ, நகைக் கடையோ, பிற வணிக நிறுவனங்களோ அங்குச் செல்லுபவர்கள், அவற்றின் ‘உண்மைத்தன்மை’ குறித்து விசாரிக்கத் தவறுவதில்லை. கோயில்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கானவை.
காத்திருப்பின்போது, பக்தர்களிடையே முட்டல் மோதல் தள்ளுமுள்ளு எல்லாம் உண்டு; கடும் வாக்குவாதங்களும் இடம்பெறும்; அடிதடியும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.
அறிவிக்கப்படும் நேரத்திற்குள் கடவுளைத் தரிசிக்கத் தவறினால் தங்களின் கோரிக்கையை அவர் நிறைவேற்றமாட்டார் என்னும் அசைக்க இயலாத நம்பிக்கையே காரணம்.
ஒரு சோதனை முயற்சியாக.....
இந்த நாட்டிலுள்ள அத்தனைப் பிரபலக் கோயில்களிலும், காலை 08 - 09 என்பது போல ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு, அந்த நேரத்தில்[மட்டும்]அந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் கடவுள் சுய உருவில் தரிசனம் தருவார். தரிசித்து உய்தி பெறத் தவறாதீர்’ என்று நிர்வாகங்கள் அறிவிப்புகளை வெளியிட்டால்.....
பக்தர்கள் கூட்டம் அலை அலையாய் அங்கெல்லாம் குவிவது மட்டுமல்ல, முந்திச் சென்று தரிக்கும் போராட்டத்தில், ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டும் அடித்துக்கொண்டு ஏராளமானவர்கள் உயிர் இழப்பார்கள் என்பது உறுதி. அந்த அளவுக்குப் பக்தி என்னும் மூடக்குணம் மிகப் பெரும்பாலான மக்களை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது!!
காணொலி: