எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 10 ஜூன், 2025

காணும் இடமெல்லாம் காட்டுமிராண்டிகள்!!!

பாதி எரிந்த மனிதத் தலை, கை, கால் போன்றவற்றைத் தூக்கிக்கொண்டு ஆட்டம்போட்டார்களாம் பக்தர்கள்.

அவர்கள் பக்தர்கள் அல்ல; காட்டுமிராண்டிகள்.

விலங்கு மாட்டிச் சிறையில் அடைக்கப்படுவதற்குரிய மிருகங்களைப் ‘பக்தர்கள்’ என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்ட ஊடகக்காரனும் அறிவு வளர்ச்சி இல்லாத ஆதிவாசியே.

இந்தக் கொடூரக் காட்சியைப் பரவசத்துடன் பார்த்தார்களாம் மக்கள். கண்டிக்கத் தவறிய அவர்களும் 100% காட்டுவாசிகளே.

ஆட்டம்போட்டவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்[கண்டுபிடித்து] கட்டி இழுத்துச்சென்று சிறையில் அடைக்காத காவலர்களும் காட்டுமிராண்டி இனத்தைச் சார்ந்த கோழைகள்தான்.

அறிவிலிகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகக் காரணமான மூடத்தனங்களைக் குறைக்க முயற்சிக்காமல், கோயில்கள் கட்டுவதையும், கும்பாபிஷேகங்கள் நடத்துவதையும் வழக்கமாக்கியுள்ள ஒன்றிய & மாநிலங்களின் ஆட்சியாளர்களும் ‘கா.மி.’ பரம்பரயினரே[சிந்திக்கக் கற்றவர்கள் அஞ்சி ஒடுங்கி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்; மறைவிடங்களில் பதுங்கிக் கிடக்கிறார்கள்] என்றியம்புவதில் நமக்குத் தயக்கம் ஏதுமில்லை.

ஆக, ஒட்டுமொத்தச் சமுதாயமும் காட்டுமிராண்டிக் குழுக்களின் ஆதிக்கத்தில்!

இந்த அவல நிலை மாறுமா? எப்போது?