அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 5 மார்ச், 2022

கொரொனா முன்னே! 'மொழிபெயர்ப்பு முகக் கவசம்'[C-Face Smart mask] பின்னே!!

கொரொனா நுண்கிருமி[Covid-19], முகக் கவசத்தை அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கியது.

உயர் தொழிநுட்பத்தைக் கையாண்டு, ஜப்பானிய 'Donut Robotics' நிறுவனம் ஒரு முகக் கவசத்தைக் கண்டுபிடித்திருக்கிறது.

இந்தக் கவசம், மொழிகளை மொழிபெயர்க்க மட்டுமல்ல, தகவல் தொடர்புக்கான இடைவெளியையும் வெகுவாகக் குறைக்குமாம்.

ஆனால் இது, எளிதாகச் சுவாசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், கொரோனாவைத் தடுப்பதற்கான கவசமாக இருக்காது; மொழிபெயர்ப்புச் செய்வதற்கு மட்டுமே பயன்படும்.

இதன் மூலம், முகக்கவசம் அணிந்தவரின் பேச்சை மொழிபெயர்ப்பதோடு, தொனியை அதிகரிக்கவும், 'படி' எடுக்கவும் செய்யலாம்.

பிளாஸ்டிக், சிலிக்கான் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இது, ஒரு உட்பொதிக்கப்பட்ட மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது, அது, புளூடூத் வழியாகக் கவசம் அணிந்தவரின் ஸ்மார்ட்போனுடன் இணைகிறது. இதன் மூலம், ஜப்பான், சீனம், கொரியன், வியட்நாமிஸ் & இந்தோனேசியம், ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு மொழிகளுள் ஒன்றை இன்னொன்றாக மொழிபெயர்ப்புச் செய்ய முடியும்.

நம் தமிழ் போன்ற இன்னும் பல முக்கிய மொழிகளும் இதில் மிக விரைவில் இடம்பெறும் என்று நம்பலாம்.

நாடாளுமன்றத்தில் நம்மவர்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ கேள்வி கேட்டால் 'இந்தி'யில் மட்டுமே பதில் சொல்லும் 'மத்திய மந்திரி'களுக்கு இந்தப் பதிவைக் காணிக்கை ஆக்குகிறேன்.

                                  *   *   *   *   *

(CNN Business)When the Covid-19 pandemic made face masks everyday essential, Japanese startup Donut Robotics spotted an opportunity. They created a smart mask — a high-tech upgrade to standard face coverings, designed to make communication and social distancing easier.

In conjunction with an app, the C-Face Smart mask can transcribe dictation, amplify the wearer's voice, and translate speech into eight different languages.

The cutouts on the front are vital for breathability, so the smart mask doesn't offer protection against the coronavirus. Instead, it is designed to be worn over a standard face mask, explains Donut Robotics CEO Taisuke Ono. Made of white plastic and silicone, it has an embedded microphone that connects to the wearer's smartphone via Bluetooth. The system can translate between Japanese and Chinese, Korean, Vietnamese, Indonesian, English, Spanish and French.

Donut Robotics first developed the translation software for a robot called Cinnamon — but when the pandemic hit, the robot project was put on hold. That's when the team's engineers came up with the idea to use their software in a face mask.

https://edition.cnn.com/2020/08/03/business/japanese-robotics-smart-face-mask-spc-intl/index.html