வழக்கமாக நடைபெறும் ஜக்கி வாசுதேவனின் ‘சிவராத்திரி’க் கொண்டாட்டத்தில் பிரபல கவர்ச்சி நடிகைகள் கலந்துகொள்வது, மெகா மேடை போட்டு அதில் ஜக்கியே ஒய்யார நடனம் ஆடுவது, விலங்குகளும் பறவைகளும் மறைவிடம் தேடி ஓடி ஒளியும் வகையில் வெள்ளியங்கிரி மலைத் தொடரே அதிரும்படி ஆடிப்பாடி அட்டகாசம் புரிவது போன்ற ஜக்கி செய்யும் அழும்புகள் மக்கள் பலராலும் கண்டிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
“மகா சிவராத்திரி விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக்கொள்வதற்குத்தான்.”[https://tamil.oneindia.com/news/chennai/high-court-order-to-isha-yoga-centre-588835.html?story=2]
நோக்கம் மிக உன்னதமானதே என்பதை உணர்ந்த பொதுமக்களில் வயது முதிர்ந்த ஜக்கியின் விசுவாசிகளில் பலர், “சத்துருக் குரு[சத்துரு எனப்படும் பகைவர்களுக்கும் குருவாக விளங்குபவர்] அவர்களே, “மிகப் பல ஆண்டுகளாக சிவராத்திரியில் உறக்கத்தைத் தவிர்ப்பதற்குத் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் முதியவர்களாகிய நாங்கள் பார்த்துப் பார்த்துப் பார்த்துச் சலித்தவை.....
கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் தொடங்கியதும் சில நிமிடங்களிலேயே நாங்கள் உறங்க ஆரம்பித்துவிடுகிறோம். சிவராத்திரி இரவில் மேற்கண்ட ஆட்டம் பாட்டங்களால் நாங்கள் விடிய விடிய விழித்திருப்பது சாத்தியமே இல்லை என்பதால், 08.03.2024அன்று நடைபெறவுள்ள நம் சிவராத்திரி விழாவில், ‘ரிக்கார்டு டான்ஸ்’ எனப்படும் முக்கால் நிர்வாண நடனங்களுக்கு[கிராமப்புறக் கோயில்களில் வழக்கமாக இடம்பெறுவது] ஏற்பாடு செய்ய வேண்டும்[பார்த்தால் உறக்கம் பஞ்சாய்ப் பறந்துவிடும்] என்று மனித மனங்களைப் படித்தவரும், உலக மகா ஞானியும், கடவுள்களின் குருவுமான தங்களின் தாள் பணிந்து வேண்டுகிறோம்.”
என்றிப்படிப் பல குடு குடு கிழங்கள் கோரிக்கை வைத்ததாகவும், அதை முழு மனதுடன் ஜக்கி அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், முன்னணி மாலைநேரச் செய்திப் பத்திரிகை ஒன்றின் துணையாசிரியர்[அடியேனின் மிக நெருங்கிய நண்பர்] நமக்குச் சற்று முன்னர் ‘வாட்ஸப்’[whatsapp] மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.