அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 8 மார்ச், 2024

ஆதி யோகியும் ‘ஆதி குரு’ ஜக்கி வாசுதேவனும்!!!

ஷாவில் மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறவுள்ளது.

சத்குரு[தான்தான் ‘சத்’துக்குக் குரு என்று ஊடகங்களை ஏற்கச் செய்தது ஜக்கி வாசுதேவன் நிகழ்த்திய சாதனை!] முன்னிலையில் இது நடைபெறும்.

இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்கிறார்.  கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 8ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள்[!!!] பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன[https://www.maalaimalar.com செய்தி].

* * * * *

*****ஈஷாவில் சக்தி வாய்ந்த தியானத்தை நிகழ்த்தப்போகிறாராம் சகலகலா வல்லவரான இந்தக் குரு. ஏற்கனவே, ஞானிகளாலும், மகான்களாலும் மேற்கொள்ளப்பட்ட தியானங்கள் சக்தி இல்லாதவையா?


*தியானம் மட்டுமல்ல, மந்திர உச்சாடனை[?]யையும், இதற்கு முன்னரான சிவராத்திரிக் கொண்டாட்டங்களில் சொல்லியிருக்கிறார்[சொல்லுதல்... சரியா?] இந்த ஆதி குரு. இவற்றால், தனி மனிதர்களுக்கோ, சமுதாயத்திற்கோ விளைந்த நன்மைகள் என்ன? எத்தனை எத்தனைக் குற்றச் செயல்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன?


*‘லிங்க பைரவி தேவி’ மகா யாத்திரையாம். இந்தப் பெண் சாமி புதுசா இருக்கே? எங்கிருந்து கண்டுபிடித்து அழைத்துவந்தார் சத்துக்குரு?


*ஆதியோகியும் இவரால் நமக்கு அறிமுகம் ஆனவர்தான். இன்னும் அந்திமக்கால யோகி, அபூர்வ யோகிகளையெல்லாம் எப்போது அறிமுகப்படுத்துவார்?


*இந்தப் புத்தம் புதுச் சாமிகளின் திவ்ய[!?] தரிசனத்தால் மக்கள் பெற்ற பயன்கள், அல்லது பெறப்போகும் பயன்கள் என்னவெல்லாம்?


இந்த நபரின் மனைவி ‘மஹாசமாதி’ ஆனது பற்றிய கேள்விகளுக்கு இன்றளவும் பதில் இல்லாத நிலையில், இக்கேள்விகளையெல்லாம் வெகு  சாமானியர்கள் கேட்பதால் பயனேதும் இல்லை.


கேட்க வேண்டிய அதிகாரப் பலம் மிக்கவர்கள் கேட்டிருந்தால் பதில்/பலன் கிடைத்திருக்கக்கூடும்.


இந்தப் பிறவி ஞானியை ஆகச் சிறந்த ஆன்மிகவாதியாக அங்கீகரித்த மேதகு பிரதமர் மோடி[ஆதியோகி சிலையைத் திறந்தவர்] அவர்கள்,  முன்பு ஈஷா விழாவில் கலந்துகொண்ட நாட்டின் முதல் குடிமகளாகிய பெருமதிப்பிற்குரிய முர்மு அவர்கள், இன்று ஈஷா சிவராத்திரிக் குதூகலக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் ‘ஜகதீப் தன்கர்’அவர்கள் ஆகியோர் அவர்களில் சிலர்.


அவர்களில் எவரும் இக்கேள்விகளைத் தங்களின் உள்மனதுக்குள்ளேனும் கேட்டுக்கொண்டிருப்பார்களா என்பது நமக்குத் தெரியாது. 


சரளமான ஆங்கிலத்தில் முன்னுக்குப்பின் முரண்பட்ட, எளிதில் புரியாத இந்துமதத் தத்துவங்களைப் பேசுவதையும், குறுக்கிட்டுக் கேள்வி கேட்பவர்களை, சம்பந்தமில்லாத எடக்குமடக்கான பதில்கள் அளித்தும் முறைத்துப் பார்த்தும்[நெற்றிக்கண் திறப்பாரோ?!] அடக்கிவிடுவதையும் வழக்கமாகக் கொண்ட இந்த நபர் உலக அளவில் பிரபலம் ஆனதும், கோடி கோடிச் சொத்துகளுக்கு அதிபதி ஆனதும்[மகாசிவராத்திரி விழா பற்றிய விளம்பரம் இடம்பெறாத ஊடகமே இல்லை. எத்தனைக் கோடிகள் செலவாயிற்றோ?!] நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துகிறது; அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.


பாவம் பொதுமக்கள்! பாவம் கடவுள்கள்!!


                                                      *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/state/vice-president-jagdeep-dhankar-to-attend-isha-maha-shivratri-on-march-8-706451