தில்லியில் நடபெற்ற விழா ஒன்றில் விருது[கதை சொல்லல் பிரிவு] பெறவந்த இளம் பெண்ணின் காலை மும்முறை தொட்டு வணங்கிப்[“நாட்டில் பாதங்களைத் தொட்டு வணங்குவது பாரம்பரியமாக இருக்கிறது. கலைத் துறையில் ஒருவர் காலில் விழும்போது, அப்போதைய மனவுணர்வு வேறுபட்டதாக[மகிழ்ச்சி தருவதாக] இருக்கும்” என்று காரணமும் சொல்லியிருக்கிறார்] பெண்னினத்தின் பெருமை போற்றிய பிரதமர் மோடியின் செயல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் அவரின் அருங்குணத்தைப் பாராட்டுகிறார்கள்.
வரலாறு காணாத இந்த அதிசய நிகழ்வுக்குக் காரணமானவர் ஒரு தமிழ்ப் பெண்[காணொலி காண்க] என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் புளகாங்கிதம் கொள்ளச் செய்திருக்கிறது.
காந்தியடிகளைப் போல் பெண்ணினத்தைப் போற்றியவர் எவரும் இல்லை. அவர்கூட ஒரு வயசுப் பெண்ணின் கால்களைத் தொட்டு மகிழ்ந்ததாக வரலாறு இல்லை. பெண்ணைத் தெய்வம் என்று சொன்ன நம் ஊர் ‘திரு.வி.கல்யாண சுந்தரனார்’ உட்பட, உலகம் போற்றும் வேறு எந்தவொரு தலைவரும் இதைச் செய்ததாக அறியப்படவில்லை.
மோடி அவர்கள், ஒரு தமிழ்ப் பெண்ணின் கால் தொட்டு வணங்கியதை, அவர் தமிழ்நாட்டிலுள்ள அத்தனைத் தமிழச்சிகளின் பாதங்களையும் தொட்டு வணங்கியதாகக் கொள்ளுதல் வேண்டும்.
இந்தப் பெருந்தகைக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள் தமிழ்ப் பெண்கள்.
தங்களினப் பெண்ணை வணங்கிப் போற்றியதற்காக இங்குள்ள ஆடவர்களும் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்தான்.
வாயளவில் மோடிக்கு நன்றி சொன்னால் போதாது என்பதால், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் அவருக்குத் தமிழர்கள் தவறாமல் வாக்களிப்பார்கள். பிற ‘பாஜக’வினருக்கு அல்ல.
‘பாஜக’ தமிழர் நலனுக்கு எதிரானது. எனினும், பிரதமர் மோடியைப் பொருத்தவரை அவரின் சில குணாதிசயங்கள் நம் போற்றுதலுக்குரியவை!