அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 7 மார்ச், 2024

வாக்குக்காக[vote] வடக்கன்களை ஒருங்கிணைக்கும் ‘பாஜக’ துரோகிகள்!!!

கீழ்வருவது உண்மைச் செய்திகளை மட்டுமே வெளியிடும், உத்தமச் சிகாமணிகள் நடத்தும் ‘தினமலர்’ இதழில் வெளியான செய்தி.

//திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை வளைக்கும் நோக்கில் பா.ஜ.,வினர் அவர்களைச் சந்தித்துக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியைப் பறிக்கும் நோக்கில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வினர் பல்வேறு தேர்தல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். நகரங்களைக் காட்டிலும், புறநகர்ப் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்திக் களமிறங்கி வேலை செய்கின்றனர்.

தினந்தோறும் மண்டல, சக்தி கேந்திர, பூத் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் உ.பி., பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என, பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி, பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களைச் செய்துவருகின்றனர்.

அவர்களை ஒருங்கிணைத்து, நடக்கவுள்ள தேர்தலில் அவர்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்//

‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தலைமை’ என்று சாத்தியமே இல்லாத ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ‘பாஜக’ கும்பல் செய்யும் கயமைத்தனங்களில் இதுவும் ஒன்று.

வடக்கன்களை வைத்துத் தமிழ் உணர்வாளர்களை வீழ்த்தும் வஞ்சகச் செயல் இது.

ஆகவே, தமிழர்கள் விழிப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயல்படவேண்டிய நேரம் இது.

‘பாஜக’ என்னும் தமிழினத் துரோகிகள் வாக்குப் பிச்சை கேட்டு வீடு தேடி வந்தால், மிகச் சரியான முறையில் ‘கவனித்து’ அனுப்ப வேண்டியது அவர்களின் தலையாய  கடமை.

                                   *   *   *   *   *

மிக மிக மிக முக்கியக் குறிப்பு:

இது உண்மை நிகழ்வா, ‘தினமலம்’ இப்படிச் செய்தி வெளியிட்டு, பாஜக கூலிகளைத் தூண்டுகிறதா என்பதை விசாரித்து அறிதல் மிக அவசியம்.


                                  *   *   *   *   *

.https://m.dinamalar.com/detail.php?id=3569679&utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAQkZDx69vjm6VcGLqsvIS4stu_hwEqEAgAKgcICjCRmY8LMPKjoQM&utm_content=rundown