அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 6 மார்ச், 2024

ஜக்கியின் சிவராத்திரிக் கும்மாளமும் நிலை மயங்கிய நீதியரசர்களும்!!!

கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வரும் 8ஆம் தேதி மாலை 6 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு கொண்டாடப்பட உள்ளது[இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப்தன்கர் கலந்து கொள்ள இருக்கிறார்>பின்னணியில் மோடி] என்பது செய்தி.

கோவை செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் என்பவர், ஈஷா யோகா மையத்தில் உருவாகிப் பரவும் ஒலி மாசு காரணமாக யானைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஈஷா யோகா மையத்தினர் சுத்திகரிக்கப்படாத, கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் விடுவதால் கால்நடைகளும், மக்களும் பாதிக்கப்படுவதாகவும் வழக்குத் தொடர்ந்தார்.

சிவராத்திரி நாட்களில் தூங்காமல் இருப்பது அவர்கள் உரிமை. ஆனால், யானைகள் ஏன் தூங்காமல் இருக்க வேண்டும் என்றும் வில்சன் வாதிட்டார்.

இவ்வழக்குத் தொடர்பாக நீதிபதிகள்[அமர்வு] பிறப்பித்த உத்தரவு.....

//ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவுநீர் அருகேயுள்ள நிலங்களில் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படுகிறதா என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த மனு குறித்து ஈஷா யோகா மையமும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும்//

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இங்கே நம்மைக் குழப்பத்திலும் வியப்பிலும் ஆழ்த்துவது.....

//விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது// என்பதுதான்.

ஜக்கியின் சிவராத்திரிக் கும்மாளம் நடைபெறவிருப்பது வரும் 8ஆம் தேதி[08.03.2024] அதன் விளைவாக[மனுதாரரின் புகாரின்படி] யானைகள் பாதிக்கப்படுவதைக் கனம் நீதியரசர்கள் கண்டுகொள்ளாதது ஏன்?

கடவுளின் இருப்பே நிரூபிக்கப்படாத நிலையில் ‘ஈசனுடன் ஓர் இரவு’[கீழேயுள்ள படத்தைக் கவனியுங்கள்] என்று கூசாமல் பொய் சொல்லும் கடவுள்களின் குருவான[சத்குரு!] இந்தக் கோடி கோடி கோடீஸ்வரச் சாமியார் மீதான பக்தி காரணமோ?


                                
                                                 *   *   *   *   *