இதில் இடம்பெற்றுச் சுற்றுவதும் சுழலுவதுமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணக்கிலடங்காத நட்சத்திரங்கள், கோள்கள் என்றிவற்றில் ஒன்றான பூமியின் வயது 4,540,000,000[earth 4.54 billion years] ஆண்டுகள்.
உயிரினங்களின் உற்பத்தி தொடங்கியது 354,000,000[3,54 billion years. புவி தோன்றி 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தோற்றம் பெற்றன] ஆண்டுகளுக்கு முன்னர்.
உயிரினங்களில், வாலில்லா மனிதக் குரங்குகள் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், ஆதி மனிதர்கள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றினார்கள்.
இவை, அறிவியலாளர் தரும் தகவல்கள்.
மேற்கண்டவற்றில், பிரபஞ்சத்தின் ஆயுளும், பூமியின் ஆயுளும், உயிரினங்களின்[உயிர்களின் தொகுப்பு] ஆயுளும் பில்லியன் கணக்கில் உள்ளன. மனித இனத்தின் ஆயுள்கூட லட்சக்கணக்கில்.
இவையெல்லாம் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் தகவல்கள்தான். இருப்பினும்.....
துய்த்தல் சுகத்தை அனுபவிக்கிற தனித்தனி[மனிதன் உட்பட] உயிர்களின் ஆயுளோ வெகு அற்பம்[இனம் என்பது 'உயிர்களின் தொகுப்பைக் குறிக்கும் ஒரு சொல். இனத்துக்குத் 'துய்த்தல்' என்பது இல்லை].
இது, மனிதனை உள்ளடக்கிய தனி உயிர்களுக்கு இயற்கை செய்த துரோகமா, கடவுளின் கைங்கரியமா?!
=========================================================================