அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 22 ஜனவரி, 2021

'உடலுறவுப் போட்டி'...ஆன்லைன் ஊடகத்தின் அண்டப்புளுகு!!!

சில ஊடகங்கள் விளம்பர நோக்கத்துடன், அவ்வப்போது அநியாயத்துக்குப் பொய்ச் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இது விசயத்தில் தினமலர், காலைக்கதிர் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் 'செய்திப்புனல்' என்னும் இணைய இதழ் கீழ்க்காணும் வகையில் ஒரு செய்தியை[22.01.2021] வெளியிட்டுள்ளது.

#செக் குடியரசு, பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் வினோதமான விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் ஓர் ஆண் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போட்டி அது.

இதற்கான நிபந்தனைகள்:

* சத்தூட்டும் மருந்துகளைப் பயன்படுத்தல் கூடாது.

* இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

* ஒரு போட்டியாளர் ஒரு முறை ஒரு பெண்ணுடன் கொள்ளும் உடலுறவில் 5 மில்லி லிட்டர் விந்துவை மட்டுமே வெளியேற்ற வேண்டும். இது துல்லியமாக அளவிடப்படும்.

21.09.2018இல் நடந்த ஒரு உடலுறவுப் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் 24 மணி நேரத்தில் 57 பெண்களுடன் புணர்ச்சி செய்து சாதனை நிகழ்த்தினார்[இவரின் பெயர் வெளியிடப்படவில்லை].

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆபாசப் பட நடிகர், 1983ஆம் ஆண்டில் 24 மணி நேரத்தில் 55 பெண்களுடன் உடலுறவு கொண்டதே சாதனையாக இருந்தது#

து முற்றிலும் ஒரு பொய்யான செய்தி என்றே எண்ணவேண்டியுள்ளது.

உடலுறவில் ஈடுபடும் ஆண்கள், குறைந்த அவகாசத்தில் விந்து வெளியேறுவதைத் தடுக்கப் பல்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். கணிசமானவர்கள் வெற்றி பெறுவதும் சாத்தியமாகக்கூடும்.

ஆலால், விந்து வெளியேறாமல் தடுப்பதற்கே அவனவன் படாதபாடு படும் நிலையில், விந்து முழுவதும் வெளியேறிவிடாமல் கட்டுப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவது எளிதான செயலல்ல.

மிக மிக மிகக் கடினமான மனக் கட்டுப்பாட்டுப் பயிற்சியின் மூலம் அது  சாத்தியப்பட்டாலும்கூட, இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது போல், துல்லியமாக, மிகப் பல தடவை[57 தடவை!!!] 5 மில்லி லிட்டர் அளவில் மட்டுமே விந்துவை வெளியேற்றுவது இயலக்கூடிய ஒன்றல்ல; அல்லவே அல்ல.

இம்மாதிரியான அசிங்கச் சாதனை நிகழ்ச்சி, 'செக்[ஸ்]' நாட்டில் இடம்பெற்றதாகச் செய்தி வெளியிடுவது அந்நாட்டிலுள்ள விபச்சார விடுதிகளின் கைங்கரியமாக இருக்கலாம். அதிகம் வாசிக்கப்படாத ஊடகங்கள் வெளியிடும் புளுகுச் செய்தியாகவும் இருக்கலாம்.

இதனால், அம்மாதிரியான விடுதிகளுக்கும் ஊடகங்களுக்கும் பயன் விளையலாம். செய்தியை வாசிப்பவர்களுக்கு எந்தவொரு பயனுமில்லை என்பதை அறிக.

"பிறர் அறிவது இருக்கட்டும், பயனற்ற இந்தச் செய்தியைப் பதிவாக நீ வெளியிட்டிருக்கிறாயே, இதனால் விளையும் பயன் என்ன?" என்று கேட்கிறீர்களா? அது வந்து...வந்து...

ஹி...ஹி...ஹி!!!

===============================================================

https://www.seithipunal.com/relationship/world-record-for-55-women-one-day