அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 2 மார்ச், 2022

'டிமென்ஷியா'[Dementia] தாக்குதலைத் தடுக்கும் 'நார்ச் சத்து' உணவு!

'டிமென்ஷியா[Dementia] என்பது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை, வயது முதிர்ந்த நிலையில் பாதிக்கும் ஒரு வகையான 'ஞாபக மறதி' நோய்.

அல்சீமர்[Alzheimer] நோய் இதைவிடவும் அதிகப் பாதிப்பை உண்டுபண்ணுகிறது.

'டிமென்ஷியா'வில், மறந்துவிடுகிற ஒன்று கொஞ்ச நேரம் கழித்து நினைவுக்கு வந்துவிடும். அல்சீமரிலோ மறந்தது எளிதில் நினைவுக்கு வராது. 

'டிமென்ஷியா' உள்ள ஒருவரிடம் பேனாவைக் கொடுத்தால் முதலில் "கத்தி" என்பார். "நல்லாப் பாருங்க... எழுதிப் பாருங்க..." என்று சொன்னால், "ஆமாம்! பேனாதான்!" என்று ஏற்றுக்கொள்வார்.

'அல்சீமர்' மறதிக்குள்ளானவர், "இல்லை, கத்தியேதான்" என்று சாதிப்பார். பாதிப்பு கடுமையாக இருக்கும். அல்சீமர் உள்ளவர்கள் சமையலறையில் போய் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு மறதி உடையவர்களாக இருப்பதும் உண்டு[இவை குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். 'முதுமை மறதியும்[Dementia] முழு மறதியும்[Alzheimer]!!' https://kadavulinkadavul.blogspot.com/2021/05/dementia-alzheimer.html]. 

இந்த 'டிமென்ஷியா'வுக்கு நார்ச் சத்துள்ள உணவு மிகவும் பயன் தரத்தக்கது என்று கண்டறிந்திருக்கிறார்களாம். இச்செய்தியைப் பதிவுலக நண்பர்களுடன்[முக்கியமாக, என்னைப் போன்ற வாலிப வயோதிகர்களுடன்!] பகிர்வதற்காகவே இந்தப் பதிவு.

'ஃபைபர்' என்னும் ஒரு முக்கிய மூலப்பொருள் மூளையின் ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதாக உள்ளது என்பது கண்டறியபட்டுள்ளது['ஊட்டச்சத்து நரம்பியல்' என்னும் இதழ்க் கட்டுரை].

நார்ச்சத்து நிறைந்த உணவில் இந்த 'ஃபைபர்' அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. எனவே, வயதானவர்கள் நார்ச் சத்து உணவுகளை அதிகம் உண்பதன் மூலம்  டிமென்ஷியாவால் நேரிடும் அபாயத்தை வெகுவாகக்  குறைக்கலாம் என்று ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்களாம்.

கண்டறிந்தது எப்படி?

மொத்தம் 3739 பெரியவர்களை, அவர்கள் உண்ணும் உணவைப்[நார்ச் சத்து உணவு உட்பட] பொருத்து  நான்கு குழுக்களாகப் பிரித்தார்கள். 

ஒரு கால இடைவெளிக்குப் பிறகு  அவர்களின் நினைவாற்றல் குறித்து ஆராய்ந்தார்கள்.  

அவர்களில், அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்பவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

==========================================================================

ஆதாரம்:

https://www.thehealthsite.com/photo-gallery/high-fibre-diet-good-for-people-with-dementia-5-foods-you-can-eat-866077/fibre-13-866086/   -பிப்ரவரி 27, 2022 3:01 PM IST