அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 3 மார்ச், 2022

'நீட்' தேர்வுக்குக் கர்னாடகாவிலும் எதிர்ப்பு!

நீட் தேர்வு குறித்துக் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர் குமாரசுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மாணவர்களின் கனவுகளைச் சிதறடிக்கிறது. நீட் தேர்வு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன் மரணத்தின் சிலையாக உருவெடுத்துள்ளது.

பத்தாம் வகுப்பில் நவீன்[உக்ரைனில் உயிரிழந்த 'கர்னாடகா' மாணவர்] 96 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இருந்தாலும் இந்தியாவில் அவருக்கு மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமப்புற மாணவர் இத்தனை சதவீத மதிப்பெண் பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இருந்தாலும் அவருக்கு மருத்துவ இடம் மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ இடம் மறுக்கப்பட்ட நிலையில் மருத்துவராகித் தன்னுடைய கனவை நனவாக்க நவீன் உக்ரைன் சென்றார்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவக் கனவு என்பது ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் கானல் நீராகியுள்ளது. காளான்கள் போல முளைத்துள்ள கோச்சிங் சென்டர்கள் மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்குகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் 99 சதவீதம் பேர் இந்த மாதிரியான கோச்சிங் சென்டர்களில் படித்தவர்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது அரசுப் பள்ளி மற்றும் கிராமப் புற மாணவர்களுக்கு முடியாத காரியம்.

வசதியானவர்களுக்கு மட்டும் உயர்கல்வியளிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். 

நீட் தேர்வால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் காரணமாக இன்னும் எத்தனை மாணவர்கள் உயிரிழக்க வேண்டுமோ? நவீனின் மரணம் நீட் தேர்வின் நோக்கம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிப் பணக்காரர்களுக்கு உதவும் மருத்துவக் கல்வி அமைப்பு என்பது இந்தநாட்டுக்கு அவமானம். உலகின் கல்வி ஆசானாவதற்கு ஏக்கம் கொண்டுள்ள மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை குறித்துத் தற்பெருமை பேசும் மத்திய அரசு ஒருமுறை தன்னுடைய இதயத்திலிருந்து இது குறித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

*****இச்செய்தி, நேற்று[02.03.2022] முன்னிரவில் தொலைக்காட்சி ஊடகங்களிலும் வெளியானது.

==========================================================================

https://tamil.news18.com/news/national/jd-leader-kumaraswamy-oppose-neet-exam-skd-708595.html