உயிர்வளி[oxygen] பூமியில் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது; நாம் அதைச் சுவாசிக்கிறோம்; செல்கள் அதில் உயிர்வாழ்கின்றன.
இந்த உயிர்வளியின் தேவை இல்லாமல் வாழும் உயிரினம் உள்ளதா? அல்லது, உயிரினங்கள் உள்ளனவா?
"உண்டு" என்பது அறிவியல் தரும் பதில்.
10க்கும் குறைவான 'செல்'களைக் கொண்ட ஒரு ஒட்டுண்ணியை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அதன் பெயர்.....
'ஹென்னெகுயா சால்மினிகோலா' என்பதாகும்.
இது, உயிர்வளி[oxygen]யைச் சுவாசிக்காமலே உயிர்வாழ்கிறதாம். இதை, ஆக்சிஜன் இல்லாமல் வாழும் பல செல்லுலார் விலங்கு என்கிறார்கள்.
இதை, இஸ்ரேலில் உள்ள 'டெல் அவிவ்' பல்கலைக் கழகத்தின் விலங்கியல் நிபுணரான 'டோரோதி ஹுச்சோன்' ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்தாராம். இக்குறிப்பு 'நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டது.
//இதில், ஆக்ஸிஜனைச் சுவாசிக்கத் தேவையான 'டிஎன்ஏ இயந்திரங்கள்' இல்லை. அதில் 'மைட்டோகாண்ரியா'[பவர்ஹவுஸ்] இல்லை// என்கிறார்களாம் விஞ்ஞானிகள்[இதெல்லாம் அடியேனுக்குப் புரியாத விஞ்ஞானம். நான் புரிந்துகொண்டது, இந்த ஒட்டுண்ணி[விலங்கு]யில் சுவாசிப்பதற்குத் தேவையான உறுப்பு இல்லை என்பதே].
[இது ஆக்ஸிஜனைச் சுவாசித்து உயிர் வாழ்வதில்லை என்பதால் நுரையீரல் போன்றதொரு உறுப்பும் தேவையற்றுப்போனது].
"பரிணாமம் விசித்திரமான திசைகளில் செல்ல முடியும் என்பதற்கு எங்களின் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு முன்னுதாரணம்" என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதைப் போலவே, ஏராளமான பாக்டீரியாக்கள் மற்றும் புரோட்டோசோவான்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
ஆக்சிஜன் இல்லாமல் இவை உயிர்வாழ்வது எப்படி என்று இயல்பாக எழும் கேள்விக்கு, "நொதித்தல் மூலம் இவை ஆற்றலைப் பெறுகின்றன" என்பது அவர்களின் பதில்.
ஆனாலும், இந்த H சால்மினிகோலா எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறது என்பது தெரியவில்லையாம். இதில் உள்ள உயிரணுக்களிலிருந்தே பெற்றிருக்கக்கூடும் என்றும் நம்புகிறார்கள்.
***இவை குறித்தெல்லாம் இன்னும் மிக விரிவாக ஆராய்ந்து, ஆக்ஸிஜன் இல்லாமலே தேவையான ஆற்றலைப் பெறும் முறை கண்டறியப்பட்டால், வருங்காலத்தில் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படும்போதோ, உயிர்வளி இல்லாத கோள்களுக்கு மனிதன் பயணிக்கும்போது அது பயன்படும் என்பது உறுதி.
முக்கியக் குறிப்பு: இந்த்ச் செய்தி, 'யூடியூப்'பிலும், பல தளங்களிலும் வெளியாகியிருப்பது 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில். எனவே, இந்த 'ஒரு செல் உயிரினம்' விஞ்ஞானிகளால் 2020ஆம் ஆண்டிலிலோ, அதற்குச் சற்று முன்னதாகவோதான் கண்டறியப்பட்டிருத்தல் வேண்டும் என்பது உறுதியாகிறது.
https://www.cnet.com/news/scientists-accidentally-discover-first-animal-that-doesnt-breathe-oxygen/ -பிப். 25, 2020
* * * * *