ரஷ்ய அதிபர் புடினுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
பதிவில் உள்ள தகவல்கள் பலரும் அறிந்தவையே. நினைவுகூர்தல் நிமித்தம் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
* * * * *
*ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக்(1787-1799) கொன்றிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், அவன் இறந்தது இரைப்பைப் புற்று நோயால்(stomach cancer) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால்தான் எனவும் நம்பப்படுகிறது.
*இத்தாலிய அரசைப் பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை நடத்தியவர் முசோலினி. ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிக்கப்பட்டு, பின் அவரும் அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரின் உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
*ஹிட்லரும்(ஆட்சிக்காலம்:1933-45] அவரது மனைவியும் தற்கொலை செய்துகொண்டனர். ஹிட்லரின் கொள்கைகள் மற்றும் ஆணைகள் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியது என்பது நியைவுகூரத்தக்கது.
*ஆறடி நாலங்குல உயரமும், 135 கிலோ எடையும் கொண்ட இடி அமீன்[1924 2003]உலகின் அதிபயங்கரக் கொடுங்கோலர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்த அவர், அவர் ஆட்சியைக் கைப்பற்றிய அதே பாணியிலேயே அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். முதலில் லிபியாவிலும் பின்னர் செளதி அரேபியாவிலும் அடைக்கலம் புகுந்தார். சரித்திரமே காணாத அளவுக்குக் கொடூரங்களை நிகழ்த்திய இடி அமீன் 2003ஆம் ஆண்டு தனது 78ஆம் வயதில் செளதி அரேபியாவில் இறந்தார்.
*சிலி நாட்டின் சர்வாதிகாரியும் கொடுங்கோல் ஆட்சியாளருமான அகஸ்டோ பினொசெட் 2006இல் இறந்தார். அவரை இயக்கியதாகக் கூறப்படும் அவரின் மனைவி 2021இல் காலமானபோது சிலி மக்கள் தெருக்களில் குவிந்து அவரின் மரணத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
==========================================================================
***தகவல்கள், வேறு வேறு இணையத் தளங்களிலிருந்து திரட்டப்பட்டவை.
***முகப்புப் படம்: புடின் தன் பெற்றோருடன். நன்றி: விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக