2021ஆம் ஆண்டு இறுதியில் உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியதாக 'லான்செட்'[Lancit Digital Media] ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.https://www.thanthitv.com/News/India/2022/03/12034803/3184781/Corona-Deaths.vpf.vpf
2021ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் வெறும் 4 லட்சத்து 89 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட 8 மடங்கு அதிகம் என்றும், 2021ஆம் ஆண்டு இறுதிவரை இந்தியாவில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் 40 லட்சத்துக்கு அதிகம் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 13 லட்சம் பேரும், ரஷ்யாவில் 10 லட்சம் பேரும் கொரோனாவால் உயிரிழந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கொரோனா மற்றும் கொரோனா தொடர்புடைய மரணங்கள், இறப்பு விகிதங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட் மாநிலங்களில் பதிவான இறப்பு எண்ணிக்கை, ஒமிக்ரான் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் பதிவான உயிரிழப்புகளைவிட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் உண்மையான பாதிப்பு மூடி மறைக்கப்படுகின்றதா என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
* * * * *
இதற்கு முன்பும், இந்த 'மூடி மறைத்தல்' வித்தையை இந்திய அரசு செய்திருக்கும்தானே?
*அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றோடு ஏற்பட்ட மோதல்களில் நம் தரப்பிலான சேதங்கள்.
*காஷ்மீர் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் நம் பக்கம் ஏற்பட்ட உயிரிழப்புகள்.
*சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கும், இந்தியைப் பரப்புவதற்கும் இவர்கள் செலவிட்ட தொகை.
*இந்தி பேசுபவர்களிண் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகள்.
'இவற்றிலும், இவை போன்றவற்றிலும் இந்த நடுவணரசு தந்த... தரும் புள்ளிவிவரங்கள் முற்றிலும் பொய்யானவையோ?' என்பதாக மக்கள் மனங்களில் சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாதது.
['லான்செட்' ஆய்வு: இந்தியாவில் 40 லட்சம்]