குளு குளு உதகை.
மூன்று முறை மணம் முடித்த ஒரு குடும்பத் தலைவி. அவளுக்கு ஒரு குழந்தை மட்டுமே.
மூன்றாவது கணவன் காலமான நிலையில் அவளுக்குக் கள்ளக் காதலர்கள் தேவைப்படுகிறார்கள். சுதந்திரப் பறவை என்பதால் விருப்பம்போல் காம சுகம் அனுபவிக்கிறாள்.
இவ்வகையிலான இவளின் வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. ஏனென்றால், கட்டுபடியாகாத நிலையில் ஆண்கள் பல பெண்களுடன் உடலுறவு கொண்டு சுகம் அனுபவிப்பது இவ்வுலகில் இயல்பானதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருப்பதுதான்.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவர்கள் அடங்காத ஆசை மனம் கொண்டவர்களாயின், பிறருக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அந்தரங்க சுகம் தேடி அலைவதில் தவறில்லை என்றுகூடச் சொல்லலாம்.
இதைச் 'சட்டப்படி அல்லாத சமுதாய வாழ்வியல் முறை' என்பது பொருந்தும்.
மேலே குறிப்பிடப்பட்ட உதகைப் பெண் இந்தக் கட்டுப்பாட்டை நினைவில் கொள்ளத் தவறினாள் என்பதால், 'காம வெறி பிடித்த கொலைகாரி' என்னும் அவப்பெயருக்கு ஆளானாள்.
ஆம், தன் கள்ளக் காதலர்களுடனான் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தது என்பதால்.....
தான் பெற்றெடுத்த குழந்தைக்கு மது கலந்த சோறு ஊட்டினாள் அவள்; அதன் தலையைச் சுவற்றுடன் மோதிக் கொலையும் செய்தாள்.
இது, இன்று[26.03.2022], காலை 06.45 மணி அளவில், 'பாலிமர் தொலைக்காட்சி'யில் வெளியான செய்தி.
கள்ள உறவுக்கு இடையூறு என்பதால், பெற்ற தாயே பிள்ளைக்கு விஷம் கொடுத்தோ, வேறு வழிமுறைகளைக் கையாண்டோ கொலை செய்வது அபூர்வ நிகழ்வல்ல, அடிக்கடி நிகழ்கிற விபரீதம் என்றாகிவிட்டது.
இம்மாதிரி அவல நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கு வழியே இல்லையா?
"உண்டு" என்று உறுதிபடச் சொல்லலாம். அவற்றில் சில.....
*பெண் பார்க்கும் சடங்கின்போது ஆணும் பெண்ணும் தனித்து உரையாடுகையில், பெண் தனக்குக் காம இச்சை அதிகம் என்பதைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ சொல்லிவிடலாம்[இதை இயல்பாகக் கருதும் காலம் வரும்]. அது அந்த ஆண் ஒரு திடமான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
*மணமான பிறகு, மிகையளவில் இருந்த பாலுணர்ச்சி பெருமளவில் குறைந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னரே குழந்தை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
*உறுதி செய்வது இயலாத நேரங்களில், கருத்தடை முறையைக் கையாளலாம்; கருக்கலைப்பும் செய்துகொள்ளலாம்.
*குழந்தை அல்லது குழந்தைகளைக் கணவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, 'அது' விசயத்தில் முழுத் திருப்தி அளிக்கும் ஏற்றதொரு கள்ளக் காதலனுடன் ஓடிப்போகலாம்.
*கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு, தனித்து வாழும் 'சுதந்திர வாழ்க்கை முறை'யைத் தேர்வு செய்யலாம்.
யோசித்தால், இன்னும் ஆகச் சிறந்த நல்ல வழிவகைகளைக் கண்டறிதல் சாத்தியப்படக்கூடும்.
ஆக, மேலே குறிப்பிட்ட வகையினான பெண்கள், அந்தரங்கச் சுகபோக வாழ்க்கை முறை குறித்துத் திருமணத்திற்கு முன்னரே 'சுயபரிசோதனை' செய்துகொள்வது அவர்களுக்கு நல்லது; சமுதாயத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும்.
வாழ்க பெண்ணினம்!
==========================================================================