அவள் பேரழகி.
ஆனால், அழகைச் சிலாகிக்கும் நிலையில் அவள் இல்லை.
பாவம், ஒரு பக்கக் கன்னத்தில் பயமுறுத்தும் முகக் கட்டி[Tumor>கட்டி; புற்றுநோய்க் கட்டியல்ல].
அழகியோ அல்லவோ, ஒரு நோயாளிப் பெண்[குமரியோ கிழவியோ] என்ற வகையில் நம் அனுதாபத்திற்கு உரியவள் அவள்.
அறுவைச் சிகிச்சை மூலம் அவள் மிக மிக விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதுதானே[கடவுள் நம்பிக்கை இல்லையாயினும்] மனிதப் பண்பு.
இங்குப் ‘பண்பு’ குறித்துக் குறிப்பிட வேண்டிய தேவை ஏன் நேர்ந்தது என்றால்.....
இந்தச் செய்திக்குக் கருத்துரை வழங்கியவர்களில்[577 பேர்... பிற்பகல், 06.15] கணிசமானவர்கள் ‘அவள் அழகி’ என்று புகழ்ந்துரைத்துவிட்டு, குணமடையவும் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள் என்பதுதான்.
நம் கேள்வி:
அழகியாக இல்லாமலிருந்தால் அவர்கள் அவள் குணமடையப் பிரார்த்தனை செய்திருக்கமாட்டார்களா?
மனிதர்களிடமுள்ள தலையாய இழிகுணங்களில் ஒன்று ஒருத்தி உயிருக்குப் போராடும் நிலையிலும், அவளின் தோற்றத்தை ஆராய்வது.
எப்போது திருந்துவார்கள் இவர்கள்?!
தொடர்புடைய காணொலி:
* * * * *
பின்வரும் காணொலிகளில் அந்தத் தவற்றை எவரும் செய்யவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.