அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 3 மார்ச், 2024

‘இது’வும் ஞாபக மறதி நோயின் ஒரு முக்கிய அறிகுறி!

ற்றே நீண்டதொரு திடப் பொருளை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துத் தூக்குவதாக கொள்ளுங்கள்.

இந்நிலையில், ஒரு கையைக் காட்டிலும் மற்றொன்று வலிமை குறைந்திருக்குமேயானால், “இந்தச் சமச்சீரற்ற தன்மை  மூளை நரம்புகளில் உள்ள குறைபாட்டைக் குறிக்கிறது. இது, அல்சைமர்&டிமென்சியா[alzheimer&dementia>இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது] நோயின் ஆரம்ப அறிகுறி”[the strength of your grip can act as an indicator of your brain's health, and this can be tested by lifting items of varying weight in order to monitor how strong or weak your grip is in each hand] என்கிறார் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் கினீசியாலஜி பேராசிரியரான டாக்டர் கேப்ளின். 

இரு கைகளுக்குமான ‘வலிமை’ வேறுபாடு 10% ஆக இருக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர் என்பது பற்றி ஆய்வு நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆயினும்.....

இந்தச் சோதனை[கைகளால் பொருளை இறுகப் பற்றித் தூக்குதல்] மிக எளிதானது என்பதாலும், சோதனையின் முடிவு ஏறுமாறாக இருப்பின், ஞாபக மறதி நோயின் ஆரம்பக் கட்டச் சிகிச்சையை நாம் மேற்கொள்ள இயலும் என்பதாலும், இந்தத் தகவல் பதிவாக்கப்பட்டுள்ளது என்பது அறியத்தக்கது.

விரிவானதும் மிகச் சரியானதுமான தகவலுக்கு, கீழ்வரும் முகவரிக்குச் செல்க.

Exercise test could help predict your likelihood of getting Alzheimer's and dementia (msn.com)