திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் ‘பொதுமறை’ என்று போற்றப்படுவதற்கான காரணங்கள்.....
*அர்த்தமுள்ள அமைதியான வாழ்வுக்குத் தேவையான நன்னெறிகளைத் திருக்குறளில் வகுத்தளித்த வள்ளுவப் பெருந்தகை, தன் தாய்மொழியாம் ‘தமிழ்’ என்னும் பெயரை நூல் மூலம் அறியச் செய்தாரில்லை.
*‘தமிழன்’ என்னும் அவரின் இனப் பெயரும் இடம்பெறவில்லை.
*தன் இயற்பெயரைப்[‘வள்ளுவர்’ என்பது ‘செய் தொழில்’ பெயர்] பிறர் அறிவதற்கான எந்தவொரு குறிப்பையும் தந்தாரில்லை.
*‘ஆதிபகவன்’, ‘இறைவன்’, வாலறிவன்’ போன்ற சொற்களால் அனைத்திற்கும் மூலமாக உள்ளதொரு பேராற்றலைக் குறிப்பிடுகிறாரே தவிர, எந்தவொரு மதச் சார்பான பெயரையும் பயன்படுத்தவில்லை.
*மனித இன மேம்பாட்டுக்காக என்றே ஒரு நூலை இயற்றிய ‘மேன்மகன்’ வள்ளுவர்.
இப்படி, இன்னும் பல போற்றுதலுக்குரிய சிறப்புகளைப் பெற்றவர் ‘பெருந்தகை’ திருவள்ளுவர் என்பதைத் திருக்குறளை முழுமையாக வாசித்த அனைவரும் அறிவார்கள்.
கோவையில் நேற்று[18.03.2024] இடம்பெற்ற மோடியின் ஊர்வலத்தின்போது, 'பாஜக’ சங்கிக் கழிசடைகள் திருவள்ளுவருக்குக் காவித் துண்டு அணிவித்திருக்கிறார்கள்.
இந்தச் சங்கிக் கூட்டம், தாய்மொழிப் பற்றும் இனப் பற்றும் இல்லாமலே, தமிழின் பெருமை பற்றியும், தமிழின உணர்வு பற்றியும் பேசுகிறது தேர்தலில் வாக்குகளை அள்ளுவதற்காக.
மத வெறி பிடித்தலையும் இந்தக் கூட்டத்தை எந்தவொரு சூழலிலும் அண்டவிடக்கூடாது, ஆதரிக்கவும் கூடாது என்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மறத்தல் கூடாது.