‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’... 19 ஆயிரம் பக்க அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்’ என்பது அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ள செய்தி.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ‘பாஜக’ மோடி வென்று மீண்டும் பிரதமர் ஆனால்[ஆனால் என்ன ஆனால்... அவரின் வெற்றி 100% உறுதி].....
ஒரே நாடான இந்தியாவில் இனி தேர்தலே நடைபெறாது. அந்த ‘ஒரே’ தேர்தலோடு[2024] தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தேர்தலே நடைபெறாது என்பதால், இனி இந்த நாட்டின் ‘ஒரே’ பிரதமர்[சர்வாதிகாரி? அதிபர்?] மேதகு மோடிதான்.
என்ன தண்டன என்று முடிவு செய்யும் ஒரே நிரந்தரப் பிரதமரும் அவர்தான்[ஒப்புக்கு சில நீதிமன்றங்களும் நீதிபதிகளும் இருக்க வாய்ப்புள்ளது].
அவர் பிறப்பிக்கவுள்ள மேலும் பல சட்டங்கள்:
ஒரே இனத்தவரான இந்தியரின் ‘ஒரே’ மொழியும் இந்திதான்.
இந்தியருக்கு ‘இந்து’ என்னும் ஒரே மதம்தான்.
நாட்டில் ராமன் என்னும் ஒரே கடவுளுக்கு மட்டுமே கோயில் கட்டலாம்.
குடும்பக் கட்டுப்பாடுச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியும் மக்கள் தொகை உயர்ந்துகொண்டே போகிறது. அதைத் தவிர்க்க, நாட்டின் எந்தவொரு குடிமகனும் ‘ஒரே’ திருமணம்தான் செய்துகொள்ளலாம்[இன்றுள்ள சட்டத்தில் நெளிவும் சுழிவும் இருப்பதால், அவனவன் ஒன்றென்ன, 9 கல்யாணம்கூடக் கட்டுகிறான் என்பது காரணம்].
குடும்பத்தார், ஆணோ பெண்ணோ ஒரே ஒரு பிள்ளைக்கு மேல் பெற்றுக்கொள்ளுதல் கூடாது.
ஆண்கள் அத்தனை பேரும் ராமனைப் போல ஏகப்பத்தினி விரதர்களாகவும், கற்புக்கு அரசர்களாகவும் வாழ வேண்டும்.
மேற்கண்ட சட்டங்களை அமல்படுத்துவது எளிது என்றாலும், கடைசிச் சட்டத்தின்படி ஏகப்பத்தினி விரதர்களாக வாழ்வது நம் ஆட்களுக்குச் சாத்தியப்படாது என்பதால்.....
ஓர் ஆண் ‘ஒரே’ ஒரு வைப்பாட்டி வைத்துக்கொள்வதற்குப் பிரதமர் அனுமதிப்பார்.
மேலும்.....
வைப்பாட்டி என்பவள் ஏறத்தாழ ஒரு பெண்டாட்டிதான் என்பதால், அவளிடம் பெறும் அந்தரங்கச் சுகம் கள்ளக்காதலி தரும் சுகத்துக்கு ஈடாகாது என்பதால், ஒரு குடும்பத் தலைவர் ஒரே ஒரு கள்ளக்காதலியைச் ‘செட்டப்’ செய்து கொள்வதற்கு மோடி வாய்மொழியாய் அனுமதி வழங்குவார் என்பது உறுதி.
வாழ்க மோடி! வளர்க அவர் புகழ்!! வெல்க அவரின் ‘ஒரே’ கொள்கை!!!