நீங்கள் மிகவும் இளகிய மனதுக்காரராக இருந்தால், ஒரு படத்தை உள்ளடக்கிய இந்தப் பதிவை வாசித்துக் கண் கலங்குவீர்கள்.
தொடர்ந்து கண்ணீர் சிந்துவதைத் தவிர்க்க நினைத்தால், மீண்டும் பதிவை வாசிக்காதீர்கள்.
பதிவின் உள்ளடக்கம் ‘B.B.C.' செய்தியின் சுருக்கம்.
* * * * *
#தன் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழித்துவிட்ட இஸ்ரேலின் குண்டுவெடிப்பிலிருந்து ‘அஹ்மத் அல்-குஃபேரி’ மட்டுமே தப்பினார்.
காஸா நகரில் உள்ள அவரது குடும்ப வீட்டில் குண்டுவெடித்து, அதில் அவரது 103 உறவினர்கள் கொல்லப்பட்டபோது, அவர் 50 மைல்கள்(80 கி.மீ.) தொலைவில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெரிகோவில் சிக்கிக் கொண்டிருந்தார்.
டிசம்பர் 8ஆம் தேதி மாலை தாக்குதல் நடந்த நேரத்திலும் அவர் தனது மனைவி ஷிரீனிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, தான் இறப்பது உறுதி என்பது ஷிரீனுக்குத் தெரிந்துவிட்ட நிலையில், “நான் எப்போதாவது ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்து விடுங்கள்” என்று அவள் அவரிடம் சொல்ல நிலைகுலைந்துபோனார் ‘அஹ்மத் அல்-குஃபேரி’.
“அப்படிச் சொல்லாதே என்று நான்[அஹமத்] சொன்னேன். அதுதான் எங்களுக்கு இடையே நடந்த கடைசி உரையாடல்" என்றார் அவர் ‘பிபிசி’யிடம்.
அன்று மாலை அவரது மாமாவின் வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய ஒரு பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலில்தான், அவரது மனைவி மற்றும் அவரது மூன்று இளம் மகள்கள்[தலா, லானா, நஜ்லா ஆகியோர்] கொல்லப்பட்டார்கள்.
அஹ்மதின் தாயார், அஹ்மதின் நான்கு சகோதரர்கள், அவர்களது குடும்பங்கள், பல சித்திகள், சித்தப்பாக்கள், அத்தைகள், மாமாக்கள் ஒன்றுவிட்ட சகோதர்கள் என்று பலரும் உயிரிழந்தனர். மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் இதில் இறந்தனர்[பிபிசி,16 பிப்ரவரி 2024].
[இந்தக் கள்ளங்கபடமற்ற பிஞ்சுகள் குண்டு வெடிப்பில் உருக்குலைந்து சிதறியது ஆண்டுகள் பல கழிந்தாலும் மறப்பது சாத்தியமா?!]
அஹ்மத் தன்னுடைய மூன்று செல்ல மகள்களான தலா, லான, நஜ்லா[படம்] ஆகியோரின் நினைவுகளால் தான் நிலைகுலைந்து போகக்கூடாது என்பதற்காக, தன் தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றின் திரைகளிலிருந்து அவர்களின் படங்களை அகற்றிவிட்டார்.
* * * * *
பட மூலாதாரம்https://www.bbc.com/tamil/articles/c4nwnywl9l0o